கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த செம்பளக்குறிச்சியில் அரசு பள்ளி சமயலறையில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று பேர் படுகாயமடைந்தனர். செம்பளக்குறிச்சி கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் பயின்று வரும் மாணவர்களுக்கு அருகே உள்ள சமயற்கூடத்தில் நாள்தோறும் உணவு தயார் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் மாணவர்களுக்கு உணவு சமைத்து கொண்டிருந்த போது, சிலிண்டரில் திடீரென தீப்பற்றிய நிலையில், சமையலர்கள் ஜெயகொடி, சரிதா ஆகியோருக்கு தீக்காயம் ஏற்பட்டது. அப்போது தீயை அணைக்க முயன்ற ஜெயக்கொடியின் உறவினருக்கும் தீக்காயம் ஏற்பட்ட நிலையில், மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.