Also Watch
Read this
By: Web Team

தொடர் கனமழையால், பாலாற்றின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த தற்காலிக மண் சாலை வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டதால், 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு இடையே சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த மேல்ஆலத்தூரில் இருந்து அகரம்சேரி செல்லும் பாலாற்றின் குறுக்கே கிராம மக்கள் ஒன்றிணைந்து தற்காலிக மண் சாலையை அமைத்து அன்றாட தேவைகளுக்காக சென்று வந்தனர்.
இந்நிலையில், தொடர் கனமழை காரணமாக பாலாற்றின் குறுக்கே தற்காலிகமாக அமைக்கப்பட்டு இருந்த மண் சாலை பாலாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.
இதனால், மேல் ஆலத்தூர், கொத்தகுப்பம், அலங்காநல்லூர், அகரம்சேரி, பள்ளி குப்பம், கூத்தம்பாக்கம் உள்ளிட்ட சுமார் 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அகரம்சேரி தேசிய நெடுஞ்சாலைக்குச் செல்ல பள்ளிகொண்டா மற்றும் மாதனூர் வழியாக செல்ல 15 கிமீ சுற்றும் நிலை ஏற்பட்டுள்ளது.

பள்ளி, கல்லூரி மாணவர்கள், கூலித் தொழிலாளிகள் உள்ளிட்டோர் அவதிப்படுகின்றனர். நிரந்தரமாக பாலம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் இங்கு பாலம் கட்ட அரசு நிதி ஒதுக்கீடு செய்ததும் குறிப்பிடத்தக்கது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved