news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews வேடிக்கை பார்க்கும் வனத்துறை.!
tv

Also Watch

வேடிக்கை பார்க்கும் வனத்துறை.!

ஆனைமலை

4

By: Fyrose Banu

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
cbe 01

கோவை மாவட்டம் ஆனைமலை அடுத்த ஆழியார் கவியருவி மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இயற்கை எழில் சூழ்ந்த பகுதியில் இருப்பதால் இங்கு தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் இன்று ஆகஸ்ட் 15 சுதந்திர தினம் என்பதால் விடுமுறையை கழிக்க குடும்பத்துடன் வந்த சுற்றுலாப் பயணிகள் ஆழியார் கவியருவியில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.

இதில் குறிப்பிட்ட சுற்றுலா பயணிகள் குளிக்க வேண்டிய இடத்தை மீறி அருவியின் பாறை மீது ஏறி குளித்து வருகின்றனர் அப்பகுதி வழுக்கல் அதிகமாக உள்ளதால் உயிரிழப்புகள் ஏற்படும் நிலை உள்ளது வனத்துறை ஊழியர்கள் நுழைவுச்சீட்டு வாங்குவதில் மட்டும் குறிக்கோளாக இருக்கிறார்களே தவிர சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பில் அலட்சியம் காட்டி வருவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து இப்பகுதி வனவர் முருகனிடம் கேட்ட பொழுது அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஒருவர் பின்னால் ஒருவராக வனத்துறையினை நின்று எப்படி பாதுகாப்பது எங்களுக்கு போதுமான ஊழியர்கள் இல்லை என்பதால் நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது என அலட்சியமாக பதில் பதில் கூறி வருவதாக கூறப்படுகிறது. இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சினிமாவில் 40 ஆண்டுகளை நிறைவு செய்த நடிகை குஷ்பு

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved