news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews பந்தயத்தில் சீறி பாய்ந்த காளைகள்
tv

Also Watch

tv

Read this

பந்தயத்தில் சீறி பாய்ந்த காளைகள்

தேனி

23

By: Fyrose Banu

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
theni 3(2)

சின்னமனூர் அருகே சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் இரட்டை மாட்டு வண்டி பந்தயம் போட்டி நடைபெற்றது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சுமார் 200க்கும் மேற்பட்ட இரட்டை மாட்டு வண்டி பந்தயதாரர்கள் உற்சாகமாக பங்கேற்றனர்.

மாபெரும் மாட்டு வண்டி பந்தயம்
மேகமலை ரோட்டில் சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இந்த போட்டியில் தமிழகத்தின் மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி, ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, கன்னியாகுமரி, தேனி ஆகிய மாவட்டங்களிலிருந்து சுமார் 200க்கும் மேற்பட்ட மாட்டு வண்டி வீரர்கள் பங்கேற்றனர்.

மாட்டு வண்டி பந்தயத்தில் சீறி பாய்ந்த காளைகள்
இந்த இரட்டை மாட்டு வண்டி பந்தயத்தில் தேன்சிட்டு, பூஞ்சிட்டு, தட்டான் சிட்டு, புள்ளிமான், இளஞ்சிட்டு கரிச்சான் என 6வகையான ஜோடி மாடுகள் போட்டியில் சீறி பாய்ந்தன. இந்தப் போட்டி மேகமலை சாலைவழியாக சுமார் 8 கிலோ மீட்டர் தூரம் எல்லையாக வைத்து நடத்தப்பட்டது. இந்த இரட்டை மாட்டு வண்டி பந்தயத்தில் சீறி பாய்ந்த காளைகளை பொதுமக்கள் சாலையின் இருபுறங்களிலும் நின்று கண்டு ரசித்தனர்.

முதல் பரிசு ரூ.15.000 வழங்கப்பட்டது
போட்டியில் மதுரை, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்ட பகுதிகளில் இருந்து சுமார் 100 க்கும் மேற்பட்ட ஜோடி மாடுகள் கொண்டு வரப்பட்டது. முதல் மூன்று இடங்களைப் பிடித்த இரட்டை மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கு முதல் பரிசு தொகையாக ரூ.15,000ம், இரண்டாவது பரிசு தொகையாக ரூ.12,000ம், மூன்றாவது பரிசுத் தொகையாக ரூ.9,000 வரை ரொக்க பரிசும் சுழல் கோப்பையும் வழங்கப்பட்டது. இந்த போட்டியை சாலையின் இரு புறங்களிலும் நின்று ஏராளமான பொதுமக்கள் கண்டு கழித்தனர்.

Related Link
ஆத்தா உன் கோயிலிலே....

ஆத்தா உன் கோயிலிலே....


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தார் ஜீப்பில் தலையை நீட்டிய படி ஆபத்தான பயணம்

1
6 hrs 58 mins agoshare
தலையை நீட்டிய படி ஆபத்தான பயணம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved