news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews காய்கறி வேனில் குட்கா பொருட்கள் கடத்தல்
tv

Also Watch

காய்கறி வேனில் குட்கா பொருட்கள் கடத்தல்

வேனை நிறுத்தி சோதனை

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
குட்கா பொருட்கள் கடத்தல்

பாவூர்சத்திரத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை காய்கனி வேனில் தென்காசி பகுதிக்கு விற்பனை செய்வதற்காக பெங்களூரில் இருந்து கடத்தி
வந்த மூன்று பேரை பாவூர்சத்திரம் போலீசார் கைது செய்தனர்.

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை கீழப்பாவூர் விலக்கு அருகே பாவூர்சத்திரம் இன்ஸ்பெக்டர் வேல்கனி , எஸ்ஐ ராஜேஷ்குமார் மற்றும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு
கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த காய்கனி ஏற்றி வந்த லோடு வேனை நிறுத்தி சோதனை செய்தனர்.

அப்போது காய்கறியான முட்டை கோஸ் மூடைகளுக்கு நடுவே அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களான குட்கா, கூலிப் போதை பொருட்கள் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் குருவன்கோட்டை கருப்பசாமி கோவில் தெருவை சேர்ந்த பாலகிருஷ்ணன் (30) அவரது தம்பி கார்த்திக் (23) மற்றும் லோடுவேன் ஓட்டுனர் துத்திகுளம் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் (38) ஆகிய மூவரும் தடை செய்யப்பட்ட குட்கா, கூலிப் போதை பொருட்களை கடத்தி வந்து ஆலங்குளம் மற்றும்
பாவூர்சத்திரம் மற்றும் தென்காசி பகுதிகளில் விற்பனை செய்வதற்காக கொண்டு வந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து போலீஸார் மூவர் மீதும் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய லோடு வேன் மற்றும் ரூ.10 லட்சம் மதிப்புள்ள சுமார் 600 கிலோ எடை கொண்ட குட்கா, கூலிப் 25 மூட்டைகள் பறிமுதல் செய்தனர்.

Related Link
காற்றுடன் பெய்த கனமழையால் பாதிப்பு

காற்றுடன் பெய்த கனமழையால் பாதிப்பு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆட்டோ ஓட்டுநரை தாக்கிய காவல் உதவி ஆய்வாளர்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved