news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews வள்ளிக்கு சீர் வரிசை கொண்டு சென்ற குறவர் இனத்தவர்
tv

Also Watch

வள்ளிக்கு சீர் வரிசை கொண்டு சென்ற குறவர் இனத்தவர்

பழனி, திண்டுக்கல்

57

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
DGL Temple

சீர் வரிசை :

அறுபடை வீடுகளில் மூன்றாம்படை வீடான பழனியில் கடந்த வாரம் தைப்பூசத் திருவிழா விமர்சையாக நடைபெற்று முடிந்தது. தைப்பூசத் திருவிழாவின் போது முத்துக்குமாரசாமி-வள்ளி,தெய்வானைக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.

குறவர் இனத்தை சேர்ந்த வள்ளிக்கும்- முருகனுக்கும் திருமணம் நடைபெற்றதால் வள்ளியின் பிறந்தவீடான குறவர் இனமக்களின் சார்பில் தாய் வீட்டு சீதனம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழகம் முழுவதும் உள்ள குறவர் இனமக்கள் அனைவரும் இணைந்து பழனி முருகனுக்கு சீர் கொண்டுசென்றனர்.

இதில் தேன், திணைமாவு,மா,பலா, வாழை உள்ளிட்ட பழங்கள், கிழங்குகள், வில்-அம்பு, ஆகியவை சீர்வரிசையில் வைத்து பெண்கள் ஊர்வலமாக எடுத்துச் சென்று முருகனுக்கும் வள்ளிக்கும் சீதனமாக வழங்கினர் .

மேளதாளம் முழங்க ஆடிப்பாடி வள்ளிக்கு சீர்வரிசை பொருட்களை கொண்டு சென்று பழனி கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைத்து முருகனை வழிபாடு செய்தனர்.

Related Link
முன்னாள் ராணுவ வீரரின் வீட்டில் கொள்ளை முயற்சி

முன்னாள் ராணுவ வீரரின் வீட்டில் கொள்ளை முயற்சி


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நேபாளத்தில் திடீர் வெள்ளத்தால் கடும் பாதிப்பு

3
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved