Also Watch
Read this
By: Manigandan Raja

சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை :
தேனி மாவட்டம் உத்தமபாளையம் சுற்றுவட்டார பகுதியில் அனுமந்தன்பட்டி புதுப்பட்டி காக்கில் சிக்கயன் பட்டி உத்தமபாளையம் கம்பம் சுற்று வட்டார பகுதிகளில் ஒரு மணி நேரமாக கனமழை பெய்து வருகிறது இதன் காரணமாக சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது கடந்த ஒரு மாத காலமாக வெயிலின் தாக்கம் அதிகரித்து இருந்த நிலையில் இந்த திடீர் மழையினால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளன வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய வெட்டப்பட்டு செல்கின்றனர்.
குறிப்பாக கடந்த ஒரு மாத காலமாக உத்தமபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்து இருந்தது விவசாயிகள் தற்பொழுது மானாவரி பயிரிடுவதற்கு நிலங்களை உழுது உள்ளனர் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய பகுதிகளில் இந்த மலை தொடர்ந்தால் விவசாயிகளுக்கு மகிழ்ச்சியாக உள்ளது.
தொடர்ந்து விவசாயிகள் இந்த திடீர் மழையினால் நிலத்தடி நீர்மட்டம் உயரலாம் என்றும் குளங்களில் நீர் வரத்து அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved