Also Watch
Read this
By: Manigandan Raja

சுற்றுலா பயணிகள் குவிந்ததால் கடும் நெரிசல் :
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தற்பொழுது கோடை சீசன் துவங்கியுள்ள நிலையில் பல்வேறு பகுதிகளில் இருந்து நாள்தோறும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்படுகிறது.
இதன் காரணமாக கொடைக்கானலில் உள்ள முக்கிய நகர் பகுதி மற்றும் சுற்றுலா தளங்களுக்கு செல்லும் பிரதான சாலைகளில் போக்குவரத்து நெரிசலாக உள்ளது . குறிப்பாக இன்று வார இறுதி நாட்களில் பல்வேறு பகுதியில் இருந்து காலை முதலே அதிக சுற்றுலா வாகனங்கள் வந்து செல்லும் நிலையில் சீசனுக்கு திடீரென சாலையோரங்களில் ஆக்கிரமிப்புக்கு கடைகள் உருவாகி வருகிறது.
இதனால் சாலையோரங்களில் சுற்றுலா வாகனங்களை நிறுத்திவிட்டு செல்வதால் எதிரே வரக்கூடிய வாகனங்கள் செல்லமுடியாமல் இருந்து வருகிறது அதே போல இன்னும் ஓரிரு நாட்களில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடைபெற உள்ள நிலையில்.
அதிகளவில் சுற்றுலா பயணிகள் வரும் பட்சத்தில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும் என்றும் சாலையோரங்களில் நிறுத்தி வைக்கும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்றும் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved