news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews மாவட்ட சட்டமன்ற தொகுதிகளில் திமுக தோல்வி குறித்து ஆய்வு
tv

Also Watch

tv

Read this

மாவட்ட சட்டமன்ற தொகுதிகளில் திமுக தோல்வி குறித்து ஆய்வு

ஒசூர், கிருஷ்ணகிரி

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ஒசூர், கிருஷ்ணகிரி

திமுக தோல்வி குறித்து ஆய்வு :

ஒசூரில் உள்ள திமுகவின் மாவட்ட அலுவலகத்தில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட நிர்வாகிகள் அவசர செயற்குழு கூட்டம் நடைப்பெற்றது கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்தில் உள்ள வேப்பனஹள்ளி, ஒசூர், தளி ஆகிய மூன்று தொகுதிகளில் தளி தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட சிபிஐ வெற்றி பெற்றது..

ஒசூர் தொகுதியில் எம்எல்ஏவும், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளராகவும் இருந்த ஒய்.பிரகாஷ் அவர்களுக்கு சீட்டு மறுக்கப்பட்டு, ஒசூர் மேயராக இருந்த சத்யா வேட்பாளராக களமிறங்கி தோல்வியடைந்தார்.

வேப்பனஹள்ளி தொகுதியில் திமுக வெற்றி பெற்றது. மூன்று தொகுதியில் திமுக கூட்டணி 2 ல் வெற்றி பெற்றிருந்தது இன்று நடந்த திமுக கூட்டத்தில் பேசிய நிர்வாகிகள் பலரும் கிருஷ்ணகிரி
மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் 4தொகுதிகளில் தோல்வியடைய பொறுப்பாளராக இருந்த முன்னாள் அமைச்சர் ஓட்டன்சத்திரம் சக்கரபாணி என்று பலரும் குற்றச்சாட்டுகளை
முன்வைத்தனர்.

அதில் சக்கரபாணி சிட்டிங் எம்எல்ஏவிற்கு சீட்டு வழங்க மறுத்த காரணம் தெரியவில்லை, பணம் கொடுத்தவர்களுக்கு தன் பென் டீம் சீட்டு கொடுக்கப்பட்டுள்ளது., யாரோ ஒருவரை மந்திரியாக்க நடந்த வேலைகளால் 3 இடங்களில் திமுக நேரடியாக போட்டியிட்டு ஒரு இடத்தில் வெற்றி பெற்றுள்ளதாக கவலை தெரிவித்தனர்.

அப்போது ஒருவர் தற்போதும் சக்கரபாணி பொறுப்பாளராக உள்ளாரா என கேட்க..? மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ் இல்லை என விளக்கமளித்தார். அப்போது மாவட்ட அலுவலகத்தில் இருந்த சக்கரபாணி படத்தை நீக்க வேண்டும் என பலரும் கோரசாக குரல் எழுப்ப கூட்டத்திற்கு பிறகு நீக்கப்படும் என உறுதியளித்தார்.

Related Link
காலை முதலே களைகட்டும் ஏற்காடு சுற்றுலாத் தலம்

காலை முதலே களைகட்டும் ஏற்காடு சுற்றுலாத் தலம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

உண்மையான சிறுத்தை பல் பதித்த செயின்தான் என்பது உறுதி

1
9 mins agoshare
வேடனுக்கு சிக்கல்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved