news-tamil-logo

3/22/2026, 1:40:25 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவு
tv

Also Watch

tv

Read this

குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவு

திருச்சி

Posted on: Feb 04, 2026 01:20 PM

9

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Trichy murder

திருச்சியில் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளியை குண்டர் தடுப்பு காவலில் அடைப்பு.

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள மணக்கால் பகுதியில் வசித்து வரும் ராஜா இவரது மகன் ரவீந்திரக்குமார்(வயது 25), என்பவருக்கும் பக்கத்து வீட்டை சேர்ந்த நாகேந்திரன் மகன் கமலேஷ் (வயது 23) என்பவருக்கும்.

கடந்த (22 -10 -.2025) தீபாவளி பண்டிகையின்போது வெடி வெடிப்பதில் ஏற்பட்ட பிரச்சினையால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக பகை இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் 5ம் தேதி இரவு ரவீந்திரக்குமார் லால்குடியில் இருந்து தனது இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு செல்வதற்காக, மணக்கால் இரயில்வே கேட் அருகே வந்தபோது, இரயில்வே கேட் மூடப்பட்டிருந்ததால், ரவீந்திரக்குமார் தனது வாகனத்தில் அமர்ந்திருந்தார்.

அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த கமலேஷ் ரவீந்திரக்குமாரை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்தார். இதனைத் தொடர்ந்து லால்குடி காவல் நிலைய போலீசார் குற்ற எண். 05/26 U/s 103(1) BNS ன் படி வழக்கு பதிவு செய்து, கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் மேற்படி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வரும் குற்றவாளி கமலேஷ் தொடர்ந்து குற்றம் செய்யும் எண்ணம் உள்ளவர் என விசாரணையில் தெரிய வந்ததாலும் அவரது தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு.

அவரை ஜாமீனில் வெளிவரமுடியாத வகையில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் பரிந்துரையின் பேரில் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் கமலேஷை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க இன்று உத்தரவிட்டார்.

அதன் பேரில் சிறையில் இருந்து வரும் கமலேஷிடம் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ஆணையினை லால்குடி போலீசார் வழங்கினர். மேலும் திருச்சி மாவட்டத்தில் ஜனவரி-2026 முதல் தற்போதுவரை மொத்தம் 04 தடுப்பு காவல் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related Link
35 சவரன் நகைகள் இருந்த பையை தவற விட்ட பெண்

35 சவரன் நகைகள் இருந்த பையை தவற விட்ட பெண்



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இறுதிக்கட்டத்தில் திமுக.. அதிரும் அறிவாலயம்!

1
46 mins agoshare
CM Stalinbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved