news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கங்கையம்மன் ஆலயத்தில் கூழ்வார்க்கும் திருவிழா
tv

Also Watch

கங்கையம்மன் ஆலயத்தில் கூழ்வார்க்கும் திருவிழா

நேர்த்திக்கடன் செலுத்தினர்

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
கங்கையம்மன்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே அக்ராபாளையம் கிராமத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீ கங்கை அம்மன் ஆலயத்தில் கூழ்வார்க்கும் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

திருவிழாவை முன்னிட்டு கடந்த 21.08.2026 அன்று அம்மனுக்கு காப்பு கட்டப்பட்டதைத் தொடர்ந்து, பக்தர்கள் விரதத்தை தொடங்கினர். இதனைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை ஸ்ரீ கங்கை அம்மனுக்கு கூழ்வார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, காப்பு கட்டி விரதமிருந்த பெண் பக்தர்கள் தலையில் தீச்சட்டி ஏந்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். அதேபோல், ஆண் பக்தர்கள் முதுகில் அலகு குத்தி, நெல் அறுவடை இயந்திரம் மற்றும் லாரி உள்ளிட்ட கனரக வாகனங்களில் தொங்கியபடியும், பம்பை மேளதாளங்கள் முழங்க வீதி வீதியாக அவற்றை இழுத்துச் சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர்.

இந்த நிகழ்வில் அக்ராபாளையம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ கங்கை அம்மனை தரிசனம் செய்து வழிபட்டனர்.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

விவசாய நிலத்தில் நின்ற CM கார், சர்ப்ரைஸ் விசிட், கூலிங் கிளாஸ் கிஃப்ட்

23
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved