news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews எருமை மாட்டு மேல் மழை பெய்தது போல்...!
tv

Also Watch

எருமை மாட்டு மேல் மழை பெய்தது போல்...!

திருவண்ணாமலை

2

By: Fyrose Banu

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
tvm 001

10 ஆண்டுகளாக பொது கழிவறை வசதி கேட்டு நடவடிக்கை எடுக்கவில்லை என புகார் தெரிவித்தும், நடவடிக்கை எடுக்கவில்லை எனஎருமை மாட்டு மேல் மழை பெய்தது போல் எருமை மாட்டுடன் கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் பங்கேற்றனர். வந்தவாசியை அடுத்த தெள்ளார் ஊராட்சி ஒன்றியஙனம் தெள்ளார் ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. தெள்ளார் வட்டார வளர்ச்சி அலுவலர் பங்கேற்காமல் கூட்டத்தை நடத்த கூடாது என பொதுமக்கள் வாதிட்டனர். இந்த கூட்டத்தில் நீண்ட கால கோரிக்கையாக தெள்ளார் ஊராட்சி பேருந்து நிலையத்தில் பொது கழிப்பறை கட்டிட பலமுறை மனு கொடுத்தும், கிராம சபா கூட்டத்தில் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் சிலர் எருமை மாட்டுடன் பங்கேற்றனர்.

தெள்ளார் ஊராட்சியில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர். தெள்ளாரைச் சுற்றியுள்ள 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பல்வேறு தேவைகளுக்காக தெள்ளாருக்கு வந்து செல்கின்றனர். இந்த நிலையில் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு என தெள்ளார் ஊராட்சியில் பொதுக் கழிவறை வசதி இல்லை. எனவே பொது கழிவறை வசதி கேட்டு கடந்த 10 ஆண்டுகளாக மனு அளித்து வருகிறோம். ஆனால் இந்த ஊராட்சி நிர்வாகமும், ஊராட்சி ஒன்றிய நிர்வாகமும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் எருமை மாடு போல் செயல்பட்டு வருகிறது. எனவே நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்து நாங்கள் எருமை மாட்டுடன் கூட்டத்தில் பங்கேற்றுள்ளோம் என்றனர்.

இதையடுத்து அங்கு வந்த தெள்ளார் வட்டார வளர்ச்சி அலுவலர் பாலமுருகன் தெள்ளார் ஊராட்சியில் கழிவறை கட்ட கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கிறோம் என்று கூறியதை அடுத்து பொதுமக்கள் எருமை மாட்டை கூட்டத்தில் இருந்து வெளியே பிடித்துச் சென்றனர். மேலும் தெள்ளார் பேரூராட்சியில் கழிவறை வசதி செய்யப்படவில்லை என்றால் எருமை மாட்டுடன் தெள்ளார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வந்து முற்றுகையிடுவோம் என்று கூறினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட கொலம்பியாவிற்கு உதவி

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved