news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கோட்டை தர்காவின் சந்தனக்கூடு விழாவுக்கு சீர்வரிசை
tv

Also Watch

கோட்டை தர்காவின் சந்தனக்கூடு விழாவுக்கு சீர்வரிசை

தரங்கம்பாடி - மயிலாடுதுறை

26

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
மயிலாடுதுறை கந்தூரி விழா

சந்தனக்கூடு விழாவுக்கு சீர்வரிசை :

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகாவில் உள்ள கோட்டை தர்காவில் 455-வது ஆண்டு கந்தூரி விழா கடந்த 22-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு திருவிழா இன்று நடைபெற உள்ள நிலையில்.

தரங்கம்பாடி மீனவ கிராமத்தில் அமைந்துள்ள ரேணுகாதேவி அம்மன் கோவிலில் இருந்து மீனவ பஞ்சாயத்தார்கள் பூ, பழம் உள்ளிட்ட சீர்வரிசை தட்டுகளை எடுத்துக்கொண்டு ஊர்வலமாக கோட்டை தர்காவை அடைந்தனர். அவர்களுக்கு இஸ்லாமிய பஞ்சாயத்தார்கள் மற்றும் தர்கா நிர்வாக சபையினர் பேண்ட் வாத்தியங்கள் முழங்க உற்சாகமாக வரவேற்று.

தர்காவுக்குள் அழைத்துச் சென்று சீர்வரிசைகளை பெற்றுக்கொண்டனர். பின்னர் பாத்தியா ஓதி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இஸ்லாமிய பஞ்சாயத்தார்கள் மற்றும் மீனவ பஞ்சாயத்தார்கள் ஒருவருக்கொருவர் சால்வை அணிவித்து, கட்டிஆரத்தழுவி அன்பை பரிமாறிக் கொண்டனர்.

தொடர்ந்து குழு புகைப்படமும் எடுத்து கொண்டனர். இஸ்லாமியர்களின் தர்கா கந்தூரி விழாவில் இந்து மீனவ பஞ்சாயத்தார்கள் கலந்து கொண்டு சீர்வரிசை வழங்கிய இந்த நிகழ்வு மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் அனைவரிடமும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இந்து, முஸ்லிம் சமுதாயங்கள் இணைந்து கொண்டாடும் இவ்விழா, தரங்கம்பாடி பகுதியில் சகோதரத்துவம் மற்றும் ஒற்றுமையின் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

Related Link
மாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழா

மாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழா



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பதக்கத்தை வென்ற இளவேனில் வாலறிவனுக்கு முதல்வர் வாழ்த்து

2
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved