Also Watch
Read this
By: Fyrose Banu

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் மத்திய பாஜக அரசை கண்டித்து தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சிறுபான்மை நிறுவனங்களின் சொத்துக்களை கபளிகரம் செய்ய முனையும் மத்திய பாஜக அரசின் வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்காற்று மசோதா FCRA ஐ திரும்ப பெற வேண்டும்,

பள்ளி கல்லூரிகள் மற்றும் அரசு விழாக்களில் வந்தே மாதரம் பாடலை பாட வில்லை என்றால் மூன்று ஆண்டு சிறை என்ற நிலைமையை திரும்ப பெற வேண்டும் என பல்வேறு கோஷங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சிறுபான்மை மக்கள் நல குழுவை சார்ந்த 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved