Also Watch
Read this
Posted on: Mar 16, 2026 10:10 AM
By: Manigandan Raja

பாலியல் தொல்லை கொடுத்த அரசு மருத்துவர் :
நீலகிரி மாவட்டம் உதகை அரசு மருத்துவக் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு மருத்துவர், பெண் வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். உதகை அரசு மருத்துவனையில் பயிலும் இந்த மாணவி படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் மன அழுத்தம் ஏற்படுவதாக மருத்துவர் ஓம் பிரகாஷிடம் கூறியுள்ளார்.
இதனை சாதகமாக்கி கொண்ட மருத்துவர் ஓம் பிரகாஷ், மாணவியின் செல்போன் எண்ணை வாங்கி அவருக்கு ஆசை வலை விரித்தாக தெரிகிறது. பின்னர் கவுன்சிலங் தருவதாக கூறி மாணவியை ஹோட்டலுக்கு அழைத்துச் சென்ற மருத்துவர், பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனை சற்றும் எதிர்பார்க்காத மாணவி அறையிலிருந்து வெளியேறி, பெற்றொருக்கு அளித்த தகவலின் பேரில் மருத்துவர் கைது செய்யப்பட்டார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved