news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பல கோடி ரூபாய் மக்கள் பணம் வேஸ்ட், கடந்த கால தவறை சரி செய்யும் தமிழக அரசு
tv

Also Watch

பல கோடி ரூபாய் மக்கள் பணம் வேஸ்ட், கடந்த கால தவறை சரி செய்யும் தமிழக அரசு

புத்துயிர் பெறுமா உப்பூர் அனல்மின் நிலையம்?

27

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

உப்பூரில் 1,600 மெகாவாட் திறன் கொண்ட அனல் மின் நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டு, பல ஆண்டுகள் கடந்தும் இதுவரை மின் உற்பத்தி தொடங்காமல் முடங்கிக் கிடக்கும் சூழலில், திட்ட மதிப்பு உயர்வு மற்றும் வட்டிச் சுமையால் சுமார் 13 ஆயிரம் கோடி ரூபாய் மக்கள் வரிப்பணம் வீணாகியிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

அனல் மின் நிலையம்
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே உப்பூரில், தமிழகத்தின் மின் உற்பத்தித் திறனை அதிகரிக்கும் நோக்கில், 1,600 மெகாவாட் திறன் கொண்ட அனல் மின் நிலையம் அமைக்க கடந்த 2010ஆம் ஆண்டு திட்டமிடப்பட்டது.

800 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு அலகுகளுடன் உருவாக்கப்பட்ட இந்தத் திட்டம், கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் 9,600 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அறிவிக்கப்பட்டது. பின்னர் கட்டுமானப் பொருட்கள் மற்றும் உபகரணங்களின் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால், திட்ட மதிப்பு 12 ஆயிரத்து 778 கோடி ரூபாயாக உயர்ந்தது.

நீதிமன்ற வழக்குகளால்...
BHEL உள்ளிட்ட நிறுவனங்களுக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பில் ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டு பணிகள் தொடங்கிய நிலையில், சுற்றுச்சூழல் அனுமதி, கடலோர ஒழுங்குமுறை ஆணைய அனுமதி உள்ளிட்ட விவகாரங்கள் மற்றும் நீதிமன்ற வழக்குகளால் திட்டம் பின்னடைவை சந்தித்தது. 2021ஆம் ஆண்டு தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் நடவடிக்கைக்குப் பிறகு பணிகள் முற்றிலுமாக முடங்கின.

எந்திரங்கள் துருப்பிடித்து...
திட்டமிட்டபடி பணிகள் நடைபெற்றிருந்தால், 2021ஆம் ஆண்டிலேயே இரண்டு அலகுகளும் மின் உற்பத்தியை தொடங்கியிருக்க வேண்டும். ஆனால், ஆண்டுகள் கடந்தும் ஒரு யூனிட் மின்சாரம்கூட உற்பத்தி செய்யப்படாத நிலையில், ஏற்கனவே வாங்கப்பட்ட இயந்திரங்கள் மற்றும் கட்டுமானப் பொருட்களும் பயன்படுத்தப்படாமல் துருப்பிடித்து கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

மக்கள் வரிப்பணம்...
இதற்கிடையே, திட்டத்திற்காக இதுவரை சுமார் 6 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்பட்டு உள்ளதாகவும், வட்டி உள்ளிட்ட நிதிச்சுமை சுமார் 13 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதாவது மக்கள் பணம் மிகப்பெரிய அளவில் வீணாகியுள்ள நிலையில், திட்டம் எப்போது செயல்பாட்டுக்கு வரும் என்ற கேள்வி தொடர்ந்து இருந்து வருகிறது.

தவெக ஆட்சியில்...
இந்த சூழலில், புதிதாக பொறுப்பேற்றுள்ள தவெக அரசு, பல ஆண்டுகளாக முடங்கிக் கிடக்கும் உப்பூர் திட்டத்தை மீண்டும் செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தொடங்கி உள்ளது.

மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் நேரடியாக திட்டப் பகுதிக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டதுடன், பழைய உபகரணங்களை மீண்டும் பயன்படுத்த முடியுமா, திட்டத்தை தொடர்வது பொருளாதார ரீதியாக சாத்தியமா, நிலக்கரி கொண்டு வருவதற்கான வழிமுறை என்ன, மேலும் எவ்வளவு நிதி தேவைப்படும்? என்பன உள்ளிட்ட அம்சங்கள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தார்.

மீண்டும் ஆய்வுக்கு...
மேலும், திட்டத்தை பொது மற்றும் தனியார் கூட்டாண்மை முறையில் செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளும் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் 30 முதல் 40 நாட்களுக்குள் திட்டத்தின் எதிர்காலம் குறித்து முடிவு எடுக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். 

பல ஆண்டுகளாக கிடப்பில் கிடந்த திட்டத்தை மீண்டும் ஆய்வுக்கு கொண்டு வந்து, ஏற்கெனவே செலவிடப்பட்ட ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் முதலீட்டை வீணாக விடாமல் பயன்படுத்துவதற்கான முயற்சியை அரசு மேற்கொண்டு வருகிறது.
நியூஸ் தமிழ் செய்திகளுக்காக இராமநாதபுரம் செய்தியாளர் புபேஸ் சந்திரன்...

Related Link
மின்வாரிய தலைமையகத்தில் முதலமைச்சர் விஜய் ஆய்வு

மின்வாரிய தலைமையகத்தில் முதலமைச்சர் விஜய் ஆய்வு

             


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நாட்டை உலுக்கிய ஷாக் ரிப்போர்ட், தேர்தல் ஆணையத்தில் திடீர் பிளவு?

24
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved