Also Watch
Read this
By: Fyrose Banu

60 ஆண்டு கால அரசியல் மாற்றத்தை நிரூபித்த புதிய அரசு இந்த அரசு என்றும் அவதூறுகளையும் சனாதன கும்பலின் முயற்சிகளையும் முறியடித்து அறநிலையத்துறை சாதனை படைத்துள்ளதாகவும் அமைச்சர் வன்னியரசு தெரிவித்தார்.
நாட்டின் 80-வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாப்பட்டு வருகிறது இதன் ஒரு பகுதியாக சென்னை திருவான்மியூரில் அமைந்துள் அருள்மிகு பாம்பன் சுவாமி திருக்கோவிலில் சுதந்திர தின சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இந்த நிகழ்வில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் மற்றும் சமூக நீதி நலத்துறை வன்னி அரசு ஆகியோர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்து கோவிலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சமபந்தி பொது விருந்தில் அமைச்சர்கள் இருவரும் பொதுமக்களுடனும் பக்தர்களுடனும் அமர்ந்து உணவருந்தினர்.

அதை தொடர்ந்து இந்து அறநிலைத்துறை அமைச்சர் ரமேஷ் செய்தியாளர்களை சந்தித்தார். சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை பாம்பன் சுவாமிகள் கோவிலில் நடைபெற்ற சமபந்தி விருந்தில் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பொதுமக்களுடன் அமர்ந்து உணவருந்தினர்.
இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் ஆண்டுதோறும் சுதந்திர தினத்தன்று சமபந்தி விருந்து நடப்பது வழக்கம் இந்த அரசில் அமைச்சர்கள் அனைவரும் மக்களுடன் மக்களாக இணைந்து உணவருந்தி இத்தினத்தைக் கொண்டாடுகின்றனர் என அவர் தெரிவித்தார்.

புதிய அரசின் முதலமைச்சர் முதல்முறையாகக் கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தது குறித்து மகிழ்ச்சி தெரிவித்ததோடு 60 ஆண்டுகளுக்குப் பிறகு சாமானியர்களும் அதிகாரத்திற்கு வர முடியும் என்பதை நிரூபித்த ஒரு மாபெரும் அரசியல் மாற்றம் இது என அவர் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு பேசுகையில், இந்து சமய அறநிலையத் துறையின் செயல்பாடுகள் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன என்றும் கோவில்களில் வழங்கப்படும் சமபந்தி விருந்தின் செயல்பாடுகள் தொடர்ந்து விரிவுபடுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

சமபந்தி விருந்தை கூடுதல் படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம் என்று இந்து அறநிலைத்துறை அமைச்சர் என்னிடம் கூறினார் என அவர் தெரிவித்தார். சாதாரண மக்களும் கோவில்களில் வந்து சமபந்தி விருந்துகளில் உணவருந்துகிறார்கள் மேலும் சமபந்தி விருந்தை கூடுதல் படுத்தும் போது இந்து அறநிலைத்துறையின் செயல்பாடுகள் மக்களுக்கானது என்பதை நிறுவக்கூடிய ஒரு வகையில் இருக்கும் என அவர் தெரிவித்தார்.

முதலமைச்சர் விஜய் ஆட்சிக்கு வந்த பிறகு இந்து அறநிலைத்துறை செயல்பாடுகள் மூன்று மாதங்களில் மக்கள் மத்தியில் பாராட்டக்கூடிய ஒரு துறையாக மாறி இருக்கிறது என்றும் எத்தனை அவதூறு பரப்பினாலும் இந்து அறநிலைத்துறையை கைப்பற்றுவதற்கு பலர் முயற்சி செய்கிறார்கள் அதில் சனாதன கும்பல்களும் முயற்சி செய்து வருகிறார்கள் ஆனால் அதையெல்லாம் முறியடித்துவிட்டு மக்களுக்கான ஒரு செயல்பாடாக இந்து அறநிலை துறை அமைச்சர் செயல்பட்டு வருகிறார் என்பது பாராட்டக்கூடியது என அவர் தெரிவித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved