Also Watch
Read this
Posted on: Mar 29, 2026 03:05 PM
By: Manigandan Raja

தாய்- மகள் தீயில் சிக்கி படுகாயம் :
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள சிவப்பிரகாசம் சேர்ந்த மீனாட்சி (40) என்பவரின் மகள் சங்கரி (13) அருகில் உள்ள பொன்.புதுப்பட்டி பெண்கள் மேல்நிலைப்பபள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகின்றார்.
.இந்நிலையில் வீட்டில் சமைத்துக் கொண்டிருக்கும் பொழுது எதிர்பாராத விதமாக அருகில் இருந்த மண்ணென்ணெய் பாட்டிலில் தீ பற்றி எரிய தொடங்கியுள்ளது. மண்ணெண்ணையில் விழுந்த தீ மளமளவென பரவி குடிசை வீடு முழுவதும் எரிந்து சேதமானது.
இதில் தீயை அணைக்க முயன்று தீயில் சிக்கிய சங்கரி மற்றும் மீனாட்சி இருவரும் பலத்த தீக்காயம் அடைந்து சிகிச்சைக்காக பொன்னமராவதி அரசு பாப்பாயி ஆச்சி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் பொன்னமராவதி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து பொன்னமராவதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றன.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved