Also Watch
Read this
By: Manigandan Raja

வெண்டைக்காய் விலை வீழ்ச்சி :
சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த தேவூர், அரசிராமணி, குள்ளம்பட்டி, மூலப்பாதை, செட்டிப்பட்டி, குஞ்சாம்பாளையம், ஓடசக்கரை தண்ணிதாசனூர் உள்ளிட்ட
சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 500 க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் வெண்டை சாகுபடி செய்துள்ளனர்.
அவ்வாறு சாகுபடி செய்யப்பட்ட வெண்டைக்காய்களை கேரளா மாநில வியாபாரிகள் விலை கொடுத்து வாங்கி செல்கின்றனர். இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக வெண்டைக்காய் விலை வீழ்ச்சி அடைந்து ஒரு கிலோ 5 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
மேலும் வியாபாரிகள் வாங்கிய வெண்டைக்காய்களை விற்பனை செய்ய முடியாமல் அரசிராமணி, குள்ளம்பட்டி பகுதிகளில் விவசாய வயல்களிலேயே கொட்டிச் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved