news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews நெல்லை நாங்குநேரி சம்பவம், பின்னணியில் பேச்சிமுத்து?
tv

Also Watch

tv

Read this

நெல்லை நாங்குநேரி சம்பவம், பின்னணியில் பேச்சிமுத்து?

யார் இந்த பாயசம் என்ற பேச்சிமுத்து?

107

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

நெல்லையில், தொடர்ந்து அரங்கேறி வரும் சாதியக் கொலைகள். அப்பாவி இளைஞர்களுக்கு சாதி என்கிற விஷயத்தை ஊட்டி வளர்த்து வரும் ரவுடி பேச்சிமுத்து. தலைமறைவாக இருக்கும் ரவுடியை நெறுங்க முடியாமல் திணறும் போலீசார். நாங்குநேரி இரட்டை கொலைக்கும், ரவுடி பேச்சிமுத்துவுக்கும் தொடர்பு உள்ளதாக வெளியாகும் பரபரப்பு தகவல்கள். யார் இந்த பாயசம் என்கிற பேச்சிமுத்து? அவனுடைய பின்னணி என்ன?

* தென் மாவட்டங்களில் தொடர்ந்து நடக்கும் கொ*கள்
* சமுதாயத்தில் தலைவனாக உருவாக நினைக்கும் இளைஞர்கள்
* ரவுடி நவீனை உருவாக்கிய பேச்சிமுத்து என்கிற பாயசம்


90 கால கட்டங்கள்ல நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, ராம்நாடு போன்ற மாவட்டங்கள்ல மூன்று சமுதாயத்துக்கு மத்தியில தொடர் சாதிய கலவரங்கள், மோதல்கள் நடந்துகிட்டு இருந்துச்சு. இப்ப அதுபோன்ற சாதிய கலவரங்கள் கல்வி அறிவு வளர்ச்சியால ரொம்பவே குறைஞ்சிருக்கு. ஆனா மது, கஞ்சான்னு சாதி வெறிக்கு ஊறிப் போன ஒரு சில இளசுகள், தங்கள் சாதி மத்தியில தலைவனா உருவாகனும்னு நினைச்சு, அடிக்கடி அப்பாவி இளைஞர்களையும், பொது மக்களையும் பாரபட்சம் இல்லாமல் கொலை செஞ்சுட்டு தான் இருக்காங்க. அப்படி சாதி ரீதியான தலைவரா உருவாகனும்னு ஒரு வெறியில வந்தவன் தான் இந்த நவீன். ஆனா அந்த நவீனையே ரவுடியா உருவாக்கியது பாயசம் என்கிற பேச்சிமுத்துன்னு கூறப்படுது.

* 13 வயதில் கொ* முயற்சி வழக்கில் சிக்கிய ரவுடி - தகவல்
* கட்டிய மனைவியையும் துடிதுடிக்க கொ*றதாக தகவல்
* அப்பாவி இளைஞர்களை அடியாட்கள் போல் பயன்படுத்துவதாக தகவல்


தூத்துக்குடியில உள்ள மணக்கரை கிராமத்தை சேந்த பேச்சிமுத்து தன்னோட 13வது வயசுல, ஒரு கொலை முயற்சி கேஸ்ல ஈடுபட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளியில அடைக்கப்பட்டான்னு கூறப்படுது. அங்கருந்து தான் இவனோட சாதி ரீதியான கொலைகள் ஆரம்பமாகிருக்கு. அதுமட்டும் இல்லாம கட்டுன மனைவியவும் துடிக்க துடிக்க கொன்ற கேசும் இவன் மேல இருக்குதுன்னு கூறப்படுது. இப்படி மிருகத்தனமா செயல்படுற பேச்சிமுத்தால இன்னைக்கு தென் மாவட்டமே நிம்மதிய இழந்து இருக்கு. தனது சமுதாய மக்கள், அதிகமா வாழுற ஒவ்வொரு கிராமத்துல இருந்தும் குறிப்பிட்ட அப்பாவி இளைஞர்கள தேந்தெடுக்குற பேச்சிமுத்து, அவங்க குடும்பத்துக்கு உதவி செய்யுற மாறி நடிச்சு, அந்த இளைஞர்கள மூளைச்சலவை செஞ்சு தன்னோட அடியாட்களா யூஸ் பண்ணிப்பான்னு சொல்லப்படுது. இதுமூலமா இவன் தன்னோட நெட்வொர்க்க தமிழ்நாடு ஃபுல்லா விரிவு படுத்திருக்கான். இவன் லோக்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர், காவல் அதிகாரிகள்ன்னு ஒரு சிலர கைக்குள்ள வச்சுக்கிட்டு எந்த ஒரு வழக்கிலும் ஸ்டேஷன்ல நேர்ல ஆஜராக மாட்டான்னு கூறப்படுது.

* பேச்சிமுத்துவால் உருவாக்கப்பட்ட ரவுடி நவீன், லெப்ட் முருகன்
* 2024ல் தீபக் ராஜாவை கொ* செய்த நவீன்
* தீபக் ராஜாவின் முகத்தை சிதைத்து கொடூர கொ*


இப்படி, இவனால உருவாக்கப்பட்டதா கூறப்படுற, தூத்துக்குடி பக்கப்பட்டிய சேந்த வடிவேல் முருகனும், கீழநத்தம் கிராமத்த சேந்த மாயாண்டியும் இப்ப உயிரோட இல்லை. ரெண்டு பேருமே மாற்று சாதி இளைஞர்களால பழிக்குப்பழியா கொலை செய்யப்பட்டுட்டாங்க. அவங்களுக்கு அப்புறம், இப்ப தன்னோட தளபதியா நாங்குநேரிய சேந்த நவீனையும், லெப்ட் முருகனையும் பேச்சிமுத்து தேர்ந்தெடுத்துருக்கிறதா கூறப்படுது. ஏற்கனவே ஆற்காடு சுரேஷ் கொலை வழக்குல உள்ள நவீன வச்சு தான், நெல்லை தீபக் ராஜாவ கொலை செய்ய பேச்சிமுத்து திட்டமிட்டிருந்ததா சொல்லப்படுது. இதுக்கு ஏற்ற மாதிரி தனது சமுதாயத்துல பெரிய தலையாக உருவாகனும்னு நினைச்சுட்டு இருந்த நவீனுக்கு இந்த கொலைக்கான அசைன்மென்ட் அல்வா சாப்பிட்டது போல் இருந்தது. அதே நேரத்துல தீபக் ராஜாவும் தன்னோட சமுதாய ரீதியான வளர்ச்சியில முன்னேறிட்டு இருந்தது நவீனோட கண்ண உறுத்திருக்கு. இதனால தன்னோட அசைன்மென்ட கச்சிதமா முடிக்கனும்னு நினைச்ச நவீன், 2024ஆம் ஆண்டு மே 20ம் தேதி நெல்லை கேடிசி நகர்ல உள்ள வைர மாளிகை ஓட்டல்ல தனது பெண் தோழியோட இருந்த தீபக் ராஜாவ முகத்த சிதைச்சு துடிக்க துடிக்க கொடூரமா கொன்னுருக்கான்.

* நவீன் வளர்ந்து வருவது பேச்சிமுத்துவுக்கு பிடிக்கவில்லை
* நவீனை சிக்க வைக்க இருவரும் பலே திட்டம் போட்டதாக தகவல்
* நாங்குநேரியில் கொ*க்கான திட்டத்தை அரங்கேற்றிய கும்பல்

இப்படி ஆரம்பிச்ச இந்த கொலைகள் அடுத்தடுத்து அரங்கேறாம இருக்க, இரு சாதியில உள்ள முக்கிய தலைகள வச்சு பேச்சுவார்த்த நடத்தியிருந்ததா கூறப்படுது. அதுக்கப்புறம் கொஞ்சம் நாட்கள் சாதி ரீதியான கொலைகள் நெல்லையில நடக்காம இருந்துச்சு. இந்த நிலையில தான் இப்ப நாங்குநேரியில ஒரு பயங்கர சம்பவம் அரேங்கேறிருக்கு. தனக்கு தளபதியாக இருந்த நவீன் தன்னைவிட தனது சமுதாய இளைஞர்கள் மத்தியில வேகமா முன்னேறது பேச்சிமுத்து மற்றும் லெப்ட் முருகனுக்கு சுத்தமா பிடிக்கலன்னு சொல்லப்படுது. நவீனை முடக்கிவிட துடிச்ச ரெண்டு பேரும், அவன மொத்தமா தீர்த்துக்கட்டவும் திட்டம் போட்டதா கூறப்படுது. ஆனா நாள் போக போக இந்த திட்டத்துல மாற்றம் ஏற்பட்டிருக்கு. நவீன மொத்தமா முடிச்சா நம்ம சமுதாயமே நமக்கு எதிரா திரும்பிரும்ன்னு நினைச்ச பேச்சிமுத்து, லெப்ட் முருகன சமீபத்துல நேருல சந்திச்சு பேச்சுவார்த்தை நடத்துனதா கூறப்படுது. நாங்குநேரியில ஒரு கொலை திட்டத்த அரங்கேற்றி அதுல நவீன சிக்க வச்சு அவர குண்டர் சட்டத்துலையோ இல்லைன்னா போலீசாரால என்கவுன்டர் செய்யவோ தூண்டி விட ரெண்டு பேரும் திட்டம்போட்டதா சொல்லப்படுது.

* டீக்கடையில் இருந்தவர்களை வெட்டி சாய்த்த கும்பல்
* 2 பேர் சம்பவ இடத்திலேயே துடிதுடிக்க உயிரிழப்பு
* இளைஞர்களின் வாழ்க்கையை கெடுக்கும் ரவுடி பேச்சிமுத்து


இதுபடி தான் பெரும்பத்து கிராமத்துக்குள்ள நுழைஞ்ச ஒரு கும்பல் டீக்கடையில் அமர்ந்திருந்த 6 பேர கண்மூடித்தனமா பயங்கர ஆயதங்களால வெட்டிட்டு அந்த கடை மேல பெட்ரோல் குண்டையும் வீசிருக்கு. இதுல மாற்று சமுதாயத்தை சேந்த ஒருத்தரும், வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த வடமாநிலத்தவரும் துடிதுடிக்க உயிரிழந்துட்டாங்க. அடுத்து ரத்த வெள்ளத்துல துடிதுடிச்சுட்டு இருந்தவங்கள பாத்த அந்த கும்பல் போலீசாரின் கவனத்த திசை திருப்ப, நவீன் வாழ்க, நவீன் வாழ்கன்னு கோஷமிட்டுட்டு அங்கருந்து தப்பிச்சு போனதாக சொல்லப்படுது. இதனால அந்த பகுதியே களேபரமா காணப்பட்டிச்சு. இந்த விஷயத்த கேள்விப்பட்டு ஸ்பாட்டுக்கு வந்த போலீசார் கொலையாளிகள பிடிக்க 5 தனிப்படைகள அமைச்சு 7 பேர கைது பண்ணிட்டாங்க.

இதுக்கிடையில சமூக வலைதளத்துல வீடியோ பதிவிட்ட நவீன், இந்த கொலைக்கும் தனக்கும் எந்த ஒரு சம்மந்தமும் இல்லைன்னு பேசிருந்தான். இதனால உண்மை கொலையாளிகள கண்டுபிடிச்சு அவங்க மேல உரிய நடவடிக்கை எடுக்கனும்ன்னு பாதிக்கப்பட்டவங்க தரப்புல கோரிக்கை விடுத்துருக்காங்க. தலைமறைவா இருந்து ரவுடி சாம்ராஜ்யத்த நடத்திட்டு வரும் பேச்சிமுத்து மற்றும் லெப்ட் முருகன் கும்பல்களை போலீஸ் களையெடுத்தால் தான் தென் மாவட்டங்கள்ல இனி சாதி ரீதியாக நடக்குற கொலைகள் குறையும்ன்னு அங்குள்ள மக்கள் தெரிவிச்சுருக்காங்க.

Related Link
கலெக்டர் ஆபிசில் நடந்த மோசடி

கலெக்டர் ஆபிசில் நடந்த மோசடி


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 30042026

0
5 hrs 42 mins agoshare
ராசிபலன்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved