news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews அணு உலைக்கு குவாரிகளால் ஆபத்து - துணை போகிறதா தவெக?
tv

Also Watch

அணு உலைக்கு குவாரிகளால் ஆபத்து - துணை போகிறதா தவெக?

News Tamil Kazhugu

19

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு பக்கத்துலேயே பெரிய அளவுல வெடிமருந்துகள வெடிக்க வெச்சு குவாரி பிஸினஸ் நடந்துக்கிட்டிருக்கறது அணு உலைக்கே பேராபத்துன்னு அந்த ஏரியா மக்கள் அச்சத்துல இருக்காங்க, ஆனா அந்த குவாரிகளுக்கு பாதுகாப்பா தவெகவோட முக்கிய விஐபிக்களே இருக்கறதா குற்றம்சாட்டுறாங்க.

நெல்லை மாவட்டம், ராதாபுரம் வட்டத்துல இருக்கன்துறை பகுதியில கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு அஞ்சு கிலோ மீட்டர் சுற்றளவுல பல குவாரிகள் இயங்கிட்டு வருது. இங்க இருந்துதான் கேரளா கட்டுமானங்களுக்காக கற்கள், ஜல்லி, மற்றும் எம். சாண்ட்ன்னு எல்லாம் போயிட்டிருக்கு. தவெக ஆட்சி வந்தவுடன் கேரளாவுக்குப் போற லோடுகள் தடை செய்யப்பட்டாலும், போன ஆட்சியவிட கூடுதலான கற்கள் ஜல்லி இப்போ இருக்கன்துறை பகுதியில எடுக்கப்படுதாம்.

அணு உலைக்கு பக்கத்துலேயே பூமிய துளையிட்டு வெடி மருந்துகள பயன்படுத்தி பெரும் பாறைகள் உடைக்கறதால பெரும் அச்சத்துல இருக்கற அப்பகுதி பொதுமக்கள் லோக்கல் தவெக எம்.எல்.ஏ.வை சந்திச்சு முறையிட்டாலும், குவாரிகளுக்கு ஆதரவா அவர் பேசுறதாவும், கனிம வளத்துறைக்கு பொறுப்பு வகிக்கிற தவெகவோட முக்கிய விஐபியோட அப்பாவே அந்தப் பகுதி குவாரிகளுக்கு ஆதரவா இருக்கறதாவும்,

குறிப்பா சென்னையில இருக்கற ஒரு திமுக விவிஐபியோட மகள் பேர்ல இருக்கற ஒரு புதுக்குவாரிக்கு தவெக அரசு அனுமதி கொடுத்திருக்கறது லோக்கல் தவெககாரங்களை கொதிக்க வெச்சிருக்காம்.

இப்போ இந்த விஷயத்தை திமுக தவிர்த்து மற்ற எதிர்கட்சிகள் கையில எடுத்து போராட்டங்களை அறிவிக்கத் துவங்கியிருக்கு. இந்தப் பிரச்னைகள் முதல்வர் கவனத்துக்கு போகுதாங்கறதுதான் ராதாபுரம் தொகுதி மக்களோட கேள்வியா இருக்கு.

Related Link
பொதுப்பணித்துறையில் திமுக மாஜியின் பி.ஏ.

பொதுப்பணித்துறையில் திமுக மாஜியின் பி.ஏ.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கைலாய யாத்திரை சென்று சிக்கிய 150 பேர் மீட்பு

10
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved