news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews OPS ஒரு மகா நடிகர்...
tv

Also Watch

tv

Read this

OPS ஒரு மகா நடிகர்...

நாமக்கல்

58

By: Fyrose Banu

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
nmk 1

பாஜக மாநில துணைத்தலைவர் பெருங்கோட்ட பொறுப்பாளர் கேபி ராமலிங்கம் செய்தியாளர் சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது தமிழகத்தில் இருக்க கூடிய 22,000 சக்தி கேந்திரம் இன்று இரவோடு பாஜக பிரச்சார கூட்டம் முடிகிறது. தோழமை கட்சிகள் பங்கு பெற்று சிறப்பாக பங்கு பெற்றனர் என தெரிவித்தார்.

திமுக ஒரிஜினல் இல்லை
நாளை மார்ச் 1 ஆம் தேதி பிரதமர் வருகிறார் 11 ஆம் தேதி மீண்டும் வருகையில் திருச்சி மாநகரில் நடைபெறும் கூட்டத்திற்கு மாவட்ட கூட்டம் நடத்துகிறோம். பிரதமர் தமிழகத்திற்கு வரும் போது அரசியலில் மாற்றம் ஏற்படும் நேற்று ஸ்டாலின் பயந்து ஒன்றிணைவோம் என்று அவசரமாக OPS சேர்த்துள்ளனர் அது பம்மாத்து வேலை. திமுக ஒரிஜினல் இல்லை கன்வெர்ட் ஆனது தான் திமுக முன்னாள் அமைச்சர்களை குறிப்பிட்டு பேசினார்.

அவ்வளவு விலை கொடுத்து கூட்டணியை வாங்கி உள்ளனர்
கன்வெர்ட் திமுக வருவதற்கு முயற்சி செய்கின்றனர். அவ்வளவு விலை கொடுத்து கூட்டணியை வாங்கி உள்ளனர். அதிமுக பாஜக மாநிலம், தேசியதிலும் இரட்டை என்ஜின் நடைபெறுகிறது. வட மாநிலத்திற்கு நிதி கொடுக்கப்படுகிறது எங்களுக்கு நிதி கொடுக்கப்பட வில்லை என கேள்வி எழுப்புகின்றனர்.

தமிழகம் திமுகவிற்கு எதிராக உள்ளது
தமிழகம் திமுகவிற்கு எதிராக உள்ளது, எடப்பாடி கையில் வாலும் கேடயமும் இருக்கிறது. அவர் யாரை சேர்க்க வேண்டும் என்று சரியான தலைமை நிரூபித்தும் காட்டியுள்ளார். ஓ.பன்னீர் செல்வம் பச்சோந்தியா? துரோகியா? தீய சக்தியா என்ற கேள்விக்கு அதிமுகவை அழிக்க வந்த தீய சக்தி அவர் தான். தமிழ்நாட்டில் சிறந்த நடிகர் சிவாஜி கணேசன் தான் என்று நினைத்தேன் ஆனால் இவர் மகா நடிகன் என்று கூறினார்.

எங்கள் சக்தியை மீறி சீட் கேட்க மாட்டோம்
பிரதமர் ஜனநாயகம் முறைபடி மக்களிடம் மாற்றம் கொண்டு வருவதற்கு விளக்கமாக பேச வருகிறார். தேர்தல் அறிவிக்கட்டும் எத்தனை தொகுதிகள் என்று முடிவு எடுக்கப்படும் 15 தேதிக்குள் முடிவு எடுக்கப்படும் என கூறிய அவர், தங்களுக்கு ஒரே நோக்கம் திமுகவை ஆட்சியில் அகற்ற வேண்டும் என்பதே, ஆதலால் எங்கள் சக்தியை மீறி சீட் கேட்க மாட்டோம். யார் நின்றால் எங்க வெற்றி பெறுவோம் என்று பார்த்து நிற்போம். பெண்களுக்கு முக்கியத்தும் வழங்கப்படும் என கூறினார்.

Related Link
திமுகவில் OPS ஐக்கியம், அம்மா TO தளபதி

திமுகவில் OPS ஐக்கியம், அம்மா TO தளபதி

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழகத்தில் பிரதமர் மோடி - கோவையில் வாக்கு சேகரிப்பு

19
3 hrs 52 mins agoshare
பிரதமர் மோடி உரைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved