Also Watch
Read this
Posted on: Nov 27, 2025 01:46 PM
By: Web Team

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே சாலை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தராததை கண்டித்து, பேரணாம்பட்டு நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பேரணாம்பட்டு 1வது வார்டுக்கு உட்பட்ட தரைக்காடு பகுதியில், சாலைகள் குண்டும், குழியுமாக காணப்படுவதோடு, முறையான குடிநீர் வசதியும் செய்து தரப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved