Also Watch
Read this
By: Web Team

புதுச்சேரி துணை நிலை ஆளுநரின் மாளிகையான ராஜ் நிவாஸின் பெயர், லோக் நிவாஸ் என மாற்றப்பட்டது. நுழைவாயிலில் இருபுறமும் ராஜ் நிவாஸ் என பொறிக்கப்பட்டிருக்கும் பெயர் பலகையில் லோக் நிவாஸ் என பெயர் மாற்றப்பட்டுள்ளது. சமீபத்தில் சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு ஆளுநர் மாளிகையின் பெயரை, ராஜ்பவன் என்பதற்கு பதில் மக்கள் பவன் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவி விருப்பம் தெரிவித்தார். அதனை மத்திய உள்துறை அமைச்சகமும் ஏற்றதால், ஆளுநர் மாளிகை மக்கள் மாளிகை என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அந்த வரிசையில் தற்போது புதுச்சேரியிலும் துணை நிலை ஆளுநர் மாளிகை பெயர் மாற்றப்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved