news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு
tv

Also Watch

tv

Read this

புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

ரங்கசாமிக்கு எதிராக ரங்கன்

13

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

புதுச்சேரி சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. வில்லியனூரில் மாநில அமைப்பாளர் சிவா, காரைக்கால் தெற்கில், முன்னாள் அமைச்சர் நாஜிம் உள்ளிட்ட 13 பேர் போட்டியிடுகின்றனர்.

புதுச்சேரியில் தேர்தல்
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 30 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வருகிற ஏப்ரல் 9ஆம் தேதி, சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல், கடந்த 16ஆம் தேதி தொடங்கிய நிலையில், வேட்பு மனு தாக்கல் நேற்று நிறைவடைந்தது. வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெற்றது. வேட்பு மனுக்களை வரும் 26ஆம் தேதி வரை திரும்பப் பெறலாம்.

தொகுதி பங்கீடு
புதுச்சேரியில், இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ், திமுக, இ.கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, தேமுதிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து தேர்தலை சந்திக்கின்றன. இந்த கூட்டணியில், காங்கிரஸ் - 16, திமுக - 14 இடங்களும் ஒதுக்கப்பட்டன. திமுக தரப்பில், கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், திமுக போட்டியிடும் 13 தொகுதிகளின் வேட்பாளர்களை திமுக ஒருங்கிணைப்பாளர் ஜெகத்ரட்சகன் எம்பி, புதுச்சேரி மாநில அமைப்பாளர் சிவா ஆகியோர் வெளியிட்டனர்.

13 வேட்பாளர்கள் அறிவிப்பு
வில்லியனூர் - சிவா எம்எல்ஏ
மங்கலம் - எஸ்.எஸ். ரங்கன்
திருபுவனை - அங்காளன்
பாகூர் - எம்எல்ஏ செந்தில்குமார்

முதலியார்பேட்டை - எம்எல்ஏ சம்பத்
உப்பளம் - எம்எல்ஏ அனிபால் கென்னடி
உருளையன்பேட்டை - கோபால்
நெல்லித்தோப்பு - கார்த்திகேயன்

ராஜ்பவன் - விக்னேஷ் கண்ணன்
காலாப்பட்டு - செந்தில் என்கிற‌ ரமேஷ்
கதிர்காமம் - வடிவேலு
காரைக்கால் தெற்கு - ‌எம்எல்ஏ நாஜிம்
நிரவி டி.ஆர்.பட்டினம் -‌ எம்எல்ஏ நாக.தியாகராஜன்

ஆறு எம்எல்ஏக்களுக்கு வாய்ப்பு
தற்போது உள்ள 6 திமுக எம்எல்ஏக்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. சமீபத்தில், திமுகவில் இணைந்த பாஜக ஆதரவு சுயேட்சை எம்எல்ஏ அங்காளனுக்கு, வாய்ப்பு கொடுக்கப்பட்டு உள்ளது. கூட்டணியில் திமுக தரப்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு உழவர்கரை தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இவற்றில் மங்கலம் தொகுதியில் முதல்வர் ரங்கசாமியை எதிர்த்து எஸ்.எஸ்.ரங்கன் போட்டியிடுகிறார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழகத்தில் பிரதமர் மோடி - கோவையில் வாக்கு சேகரிப்பு

19
10 hrs 20 mins agoshare
பிரதமர் மோடி உரைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved