news-tamil-logo

3/24/2026, 9:32:41 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews எம்எல்ஏ பழனியாண்டி குவாரிக்குள் பயங்கரம்
tv

Also Watch

tv

Read this

எம்எல்ஏ பழனியாண்டி குவாரிக்குள் பயங்கரம்

புதைக்கப்பட்ட உண்மை என்ன?

Posted on: Mar 24, 2026 06:45 AM

3

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

கரூரில் விதியை மீறி இயங்கி வந்த குவாரி குறித்து செய்தி சேகரிக்க சென்ற நியூஸ் தமிழ் செய்திக் குழுவை கொடூரமாக தாக்கிய திமுக எம்.எல்.ஏ. பழனியாண்டியின் மகனுக்கு சொந்தமான நத்தம் குவாரியில், அழுகிய நிலையில், ஆண் சடலம் மீட்கப்பட்டது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மன நலம் பாதிக்கப்பட்டவர்
பத்து நாட்களாக மாயமானதாக தேடப்பட்டு வந்த மனநலம் பாதிக்கப்பட்ட நபர், குவாரிக்குள் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், குவாரி மீது அடுக்கடுக்கான புகார் கூறி, பொது மக்கள் முற்றுகையிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

எம்எல்ஏ மகன் குவாரி
திண்​டுக்​கல் மாவட்​டம், நத்​தம் அருகே சரளைபட்​டி​யில் உள்ள ஸ்ரீரங்​கம் திமுக எம்​எல்ஏ பழனி​யாண்​டி​யின் மகனுக்​குச் சொந்​த​மான குவாரி​யில் இளைஞர் உடல் மீட்​கப்​பட்​டது. இதுகுறித்து உரிய விசா​ரணை நடத்​து​மாறு அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி உள்​ளிட்​டோர் வலி​யுறுத்​தி உள்​ளனர். நத்​தம் அருகே சரளைப்​பட்​டி​யில், ஸ்ரீரங்​கம் திமுக எம்​எல்ஏ பழனி​யாண்​டி​யின் மகன் விஜய​பார​திக்கு சொந்​த​மான கல் குவாரி உள்​ளது. சரளைப்​பட்​டியைச் சேர்ந்த 25 வயதான கருப்​ப​சாமி, தாய், தந்தை இல்​லாமல் உறவினர் பராமரிப்​பில் வசித்து வந்​தார். இவர் மனநலம் பாதிக்​கப்​பட்ட நிலை​யில், குவாரி பகு​தி​யில் சுற்​றித் திரிந்து வந்​துள்​ளார். வாய்​பேச முடி​யாத நிலை​யிலும் அடிக்​கடி குவாரி பகு​திக்​குச் சென்று வடமாநிலத் தொழிலா​ளர்​களு​டன் பழகி வந்​துள்​ளார்.

உரிய விசாரணை வேண்டும்
இந்​த நிலை​யில், கருப்​ப​சாமியை கடந்த 10 நாட்​களாக காண​வில்​லை. உறவினர்​கள் பல இடங்​களில் தேடி​யும் கண்​டு​பிடிக்க முடிய​வில்​லை. ஞாயிற்​றுகிழமை அன்று, குவாரி​யில் சுமார் 10 அடி பள்​ளத்​தில் கருப்​ப​சாமி உடல் அழுகிய நிலை​யில் கிடந்​து உள்​ளது. இதுகுறித்து தகவல் அறிந்த கருப்​ப​சாமி​யின் உறவினர்​கள் குவாரியை முற்​றுகை​யிட்​டனர். இவர்​களு​டன் நாம் தமிழர் கட்​சி​யினரும் போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர். திண்​டுக்​கல் புறநகர் டி.எஸ்.பி. சங்​கர் மற்​றும் போலீ​ஸார் கருப்​ப​சாமி​யின் உடலைக் கைப்​பற்​றி, திண்​டுக்​கல் அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை​யில், பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்​தனர்.

இதுதொடர்​பாக நத்​தம் போலீ​ஸார் சந்​தேக மரணம் என வழக்​குப் பதிவு செய்​து, பிரேதப் பரிசோதனை முடிந்து உறவினர்​களிடம் உடலை ஒப்​படைத்தனர். இதனிடையே இந்த உயி​ரிழப்பு குறித்து உரிய விசா​ரணை நடத்த அரசியல் கட்சித் தலை​வர்​கள் உள்ளிட்ட பொது மக்கள் வலி​யுறுத்​தி உள்​ளனர்.

Related Link
ஈரான் மீதான போர் 5 நாட்கள் நிறுத்தி வைப்பு

ஈரான் மீதான போர் 5 நாட்கள் நிறுத்தி வைப்பு


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

2
23 mins agoshare
pdy listbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved