news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews சிறுமி பாலியல் வன்கொடுமை - திமுக நிர்வாகி கைது
tv

Also Watch

tv

Read this

சிறுமி பாலியல் வன்கொடுமை - திமுக நிர்வாகி கைது

சென்னை

21

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

சென்னை, திருமங்கலம் அருகே 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக திமுக நிர்வாகி கைதானார். தி.நகர் வட்ட துணை அமைப்பாளரும், வழக்கறிஞரணி நிர்வாகியுமான பரத் என்பவரை மகளிர் போலீசார் கைது செய்தனர்.

சித்தப்பா முறை உறவினர்
சென்னை, அண்ணாநகர் மேற்கு திருமங்கலம் பாடி குப்பம் பகுதியைச் சேர்ந்தவர், சென்னையில் உள்ள காவல் நிலையம் ஒன்றில் அமைச்சுப் பணியாளராக பணியாற்றி வருகிறார். இவரது 12 வயது மகள் 7ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுமி, கடந்த சில ஆண்டுகளாக தனியார் அறக்கட்டளை ஒன்றில், நடனம் பயின்று வருவதாக தெரிகிறது. இங்கு குட் டச், பேட் டச் குறித்து கற்று தந்து உள்ளனர். இந்த நிலையில், சிறுமி வீட்டில் தனியாக இருந்த சமயத்தில், சித்தப்பா முறை உறவினரான கோடம்பாக்கத்தைச் சேர்ந்த 31 வயதான பரத் என்பவர், வீட்டில் நுழைந்து பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து உள்ளார்.

ஐந்து ஆண்டுகளாக...
இதுகுறித்து அந்த சிறுமி தான் நடனம் பயின்று வரும் அறக்கட்டளை நிர்வாகியிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அவர், சிறுமியின் பெற்றோரிடம் கூறி உள்ளார். இதுதொடர்பாக சிறுமியின் பெற்றோர் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் சிறுமிக்கு 5 ஆண்டுகளாக பரத், பாலியல் தொல்லை கொடுத்து வந்தது, தெரிய வந்தது.

நீதிமன்ற காவல்
இதையடுத்து, போக்சோ உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ், போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். விசாரணைக்கு பிறகு பரத்தை போலீசார் கைது செய்தனர். கைதான பரத், தி.மு.க வழக்கறிஞர் பிரிவு பகுதி அமைப்பாளராக உள்ளார் என்பது தெரிய வந்து உள்ளது. கைதான வழக்கறிஞர் பரத்தை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

செல்போனை இழந்த பக்தர் வேதனை

0
8 mins agoshare
செல்போன் திருடியதாக குற்றச்சாட்டு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved