news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news மதம் மாறினால் பட்டியலினத்தவர் கிடையாது - உச்சநீதிமன்றம்
tv

Also Watch

tv

Read this

மதம் மாறினால் பட்டியலினத்தவர் கிடையாது - உச்சநீதிமன்றம்

சட்டப்பூர்வ உரிமைகள் செல்லுபடியாகாது

Posted on: Mar 24, 2026 10:33 AM

55

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

மதம் மாறினால், பட்டியலினத்தில் இருக்க முடியாது என்று, உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது. இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள் மட்டுமே பட்டியலினத்தவராக இருக்க முடியும் எனவும் விளக்கம் அளித்துள்ளது.

வழக்கின் பின்னணி
கடந்த 2021ஆம் ஆண்டு, ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிந்தாதா ஆனந்த் என்பவர் மதபோதகராக இருந்து வருகிறார். அவர் இந்து மதத்தில் இருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாறியவர். இவர் மாநில உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.

அதில், சில நபர்கள் தான் செய்யும் நற்பணிகளை எதிர்த்ததாகவும், தன்னை தாக்கி சாதி ரீதியிலான பழி சொற்களைப் பயன்படுத்தியதாகவும் காவல்துறையில் புகார் அளித்தார். இதனடிப்படையில் குற்றவாளிகளை கைது செய்த போலீசார், அவர்கள் மீது எஸ்சி,எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.

சட்டத்தை தவறாக பயன்படுத்துவதற்கு சமம்
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான அக்கலா ராமி ரெட்டி என்பவர், மதபோதகர் ஆனந்த் மதம் மாறிய நிலையில் அவர் எஸ்சி - எஸ்டி சட்டத்தைப் பயன்படுத்துவது சட்டப்படி ஏற்கத்தக்கது அல்ல என்று வாதிட்டு, தங்கள் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்தார். இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட ஆந்திர உயர்நீதிமன்றம், பட்டியலின மற்றும் பழங்குடியினர் சட்டமானது பாதுகாப்பு கட்டமைப்புகளுக்காக உருவாக்கப்பட்டது, வேறு மதத்திற்கு மாறுவதன் மூலம் அந்த பிரிவில் உள்ள சலுகைகளை ஒருவர் பயன்படுத்த முடியாது எனவும், இது சட்டத்தை தவறாக பயன்படுத்துவதற்கு சமம் எனவும் தெரிவித்தது.

சட்டப்பூர்வ உரிமைகள் செல்லுபடியாகாது
இதனை எதிர்த்து, மதபோதகர் ஆனந்த் உச்சநீதிமன்றத்தை நாடினார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிரஷாந்த் குமார் மிஸ்ரா - மன்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, ஆந்திர மாநில உயர் நீதிமன்றத் தீர்ப்பை உறுதி செய்தது. பட்டியலினத்தைச் சேர்ந்த ஒரு நபர், தானாக முன்வந்து வேறு மதத்திற்கு மாறி அதனை தீவிரமாக பின்பற்றும் நிலையில், அவருக்கு வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழங்கப்படும் பாதுகாப்பு உட்பட, பட்டியல் சாதி அடையாளத்துடன் தொடர்புடைய சட்டப்பூர்வ உரிமைகள் செல்லுபடியாகாது என்று தெரிவித்தது.

உச்சநீதிமன்றம் தீர்ப்பு
ஒரு சாதிச் சான்றிதழ் இருப்பதை விட சம்பவம் நடந்த நேரத்தில் பாதிக்கப்பட்ட நபர், பின்பற்றும் மதமே தீர்மானிக்கும் காரணியாக உள்ளதாக நீதிபதிகள் தெரிவித்தனர். இந்து, சீக்கியம் அல்லது பௌத்த மதம் அல்லாத வேறு மதத்தைப் பின்பற்றும் ஒருவர், பட்டியல் சாதியினருக்குக் கிடைக்கும் அரசியலமைப்புப் பாதுகாப்புகளைக் கோர முடியாது என்றும் தெரிவித்தனர்.

சாதி அமைப்பு கிறிஸ்தவ மதத்திற்கு அந்நியமானது என்றும், இந்து மதத்தின் சமூக கட்டமைப்பினால் உருவான சாதி அடிப்படையிலான பாகுபாட்டைக் கையாள்வதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு சட்டத்தின் பலனை தானாக முன்வந்து மதம் மாறிய ஒருவர் கோர முடியாது என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

இஸ்லாம், கிறிஸ்தவத்தில் இணைந்தால் பட்டியலினத்தவர்கள் கிடையாது என்றும் தெளிவுபடுத்தி உள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திமுக கூட்டணியில்.. போட்டியிட போகும் தொகுதி? - கசிந்த ரகசியம்

0
3 mins agoshare
DMK Alignsbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved