Also Watch
Read this
சேலம் மாவட்டம், மேட்டூரில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தேர்தல் பரப்புரை மேற்கொண்டு, வேட்பாளர் வித்யா வீரப்பனை ஆதரித்து, தீவிர வாக்கு சேகரித்தார்.

மேட்டூரில் சீமான் பிரச்சாரம்
மேட்டூர் அருகே மேச்சேரி பேருந்து நிலையத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், மேட்டூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் வித்யா ராணியை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது சீமான் பேசியதாவது;
இத்தன கோடி தமிழ் சொந்தங்கள், பெற்றோர், பேரன்புமிக்க என் உறவுகளோடு இணைந்து கூட்டணி வைத்திருக்கிற ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி மட்டும் தான். நான் கட்சியை நம்பவில்லை, தலைவர்களை நம்பவில்லை, தமிழர்களை நம்புகிறேன். நான் இயக்கங்களை நம்பவில்லை அடுத்த தலைமுறை இளைஞர்களை நம்பி, இந்த களத்திலே உங்கள் பிள்ளைகள் வந்திருக்கிறோம்.

வேட்பாளர் வித்யா ராணி
இந்த மேட்டூர் தொகுதியில் போட்டியிடுகிற என் அன்பு மகள் வித்யா ராணி வீரப்பனுக்கு, விவசாயி சின்னத்திலே வாக்கு செலுத்த வேண்டும்.

திராவிடத்தின் நோக்கம் பிரபாகரன் என்றால், அவன் தீவிரவாதி, பிரிவினைவாதி. வீரப்பன் என்றால் அவன் சந்தன கட்டை கடத்தியவன் மாயாவி, திருடன் என்று கட்டமைப்பார்கள். ஜெயலலிதா, கருணாநிதிக்கு என்ன பெயர்? என்று கேட்டேன், வாயை மூடிக்கொண்டு நின்று விட்டனர். ஒரே ஒருமுறை, ஒருமுறை உங்கள் பிள்ளைகள் கைகளில் இந்த நாட்டை ஒப்படைத்து பாருங்கள். ஒரு ஐந்து ஆண்டுகள் உலகத்தில் தலை சிறந்த நாடாக மாற்றுவோம்.
இவ்வாறு சீமான் வாக்கு சேகரித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved