news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news ஒரே நாளில் 5 இடங்களில் விஜய் பிரச்சாரம்
tv

Also Watch

ஒரே நாளில் 5 இடங்களில் விஜய் பிரச்சாரம்

பெரம்பூரில் இருந்து...

68

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

வரும் 28ஆம் தேதி, 5 தொகுதிகளில், தவெக தலைவர் விஜய் வாகன பிரச்சாரம் செய்ய அனுமதி கோரி, தவெக மனு அளித்து உள்ளது. பெரம்பூர் உள்ளிட்ட 5 தொகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பிரச்சாரம் செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது.

5 தொகுதிகளில் பிரச்சாரம்
தவெக தரப்பில், சென்னையில் ஒரே நாளில் 10க்கும் மேற்பட்ட தொகுதிகளில், கட்சித் தலைவர் விஜய் பிரசாரம் செய்ய காவல் ஆணையரிடம் மனு அளிக்கப்பட்ட நிலையில், அனுமதி மறுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனைத் தொடர்ந்து, சென்னையில், நாளை மறுநாள் சனிக்கிழமை மார்ச் 28ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை, 5 தொகுதிகளில் பிரசாரம் மேற்கொள்ள உரிய பாதுகாப்பு வழங்க, சென்னை காவல் ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டு உள்ளது.

பெரம்பூரில் இருந்து...
தவெக தலைவர் விஜய் போட்டியிட உள்ளதாக கூறப்படும்
பெரம்பூர் சட்டப்பேரவைத் தொகுதியில் காலை 10 மணி
கொளத்தூரில் பகல் 1 மணி

வில்லிவாக்கம் பகல் 2 மணி
அண்ணா நகர் பிற்பகல் 3 மணி
விருகம்பாக்கம் மாலை 4 மணிக்கு பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதி கோரப்பட்டு உள்ளது.
விஜய் பேச உள்ள ஒவ்வொரு இடத்திலும், சுமார் 3,000 பேர் பங்கேற்பார்கள் என்றும், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வண்ணம் பாதுகாப்பு வழங்கவும் மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தொடர் பிரச்சாரத்திற்கு திட்டம்
மொத்தம் 20 நாட்கள் பிரச்சாரம் செய்யும் தவெக தலைவர் விஜய், தினசரி 5, 6 இடங்களில் பிரச்சாரம் செய்து பேச உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. தவெகவின் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலும் வெளியாகி உள்ளது. விஜய், ஆனந்த், செங்கோட்டையன், ஆதவ் உள்ளிட்ட 20 நிர்வாகிகளின் பெயர்கள் வெளியிடப்பட்டு உள்ளன. பெரம்பூரில் இருந்து தமிழகம் முழுவதும் பயணம் செய்து தவெக தலைவர் விஜய் வாக்கு சேகரிக்க உள்ளார்.

Related Link
திமுகவை விளாசிய எடப்பாடி பழனிசாமி

திமுகவை விளாசிய எடப்பாடி பழனிசாமி

             


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆசிய விளையாட்டு ஹாக்கி போட்டி - இந்தியா வெற்றி

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved