Also Watch
Read this
விளாத்திகுளம் மாணவி பா*யல் வன்கொடுமை செய்து கொ*ல செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி தர்ம முனீஸ்வரனுக்கு இரட்டைத் தூக்கு தண்டனை தீர்ப்பு வழங்கி, நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதித்து தூத்துக்குடி மாவட்ட போக்சோ நீதிமன்ற நீதிபதி பிரித்தா உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
"தர்ம முனீஸ்வரன் குற்றவாளி"
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் இயற்கை உபாதை கழிக்கச் சென்ற மாணவி பா*யல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் தர்ம முனீஸ்வரன் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.

அவருக்கான தண்டனை விபரம் இன்று மே 25ஆம் தேதி, தூத்துக்குடி மாவட்ட போக்சோ நீதிமன்றம் அறிவித்து உள்ளது.

2 மாதங்களில் தீர்ப்பு
கடந்த மார்ச் மாதம் வேடநத்தம் கிராமத்தில் +2 மாணவி பா*யல் வன்கொடுமை செய்து படுகொ*ல செய்யப்பட்டார். இந்த வழக்கு தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் நடந்துவந்த நிலையில், 2 மாதங்களில் போக்சோ வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved