Also Watch
Read this
பாலியல் உள்ளிட்ட கடும் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது துரிதமாக வழக்குப் பதிந்து, விரைந்து விசாரித்து கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும் என முதலமைச்சர் விஜய் உத்தரவு பிறப்பித்து உள்ளார். தண்டனை பெற்றுத் தருவது, குற்றச் செயல்களில் ஈடுபட திட்டமிடுவோரை தடுக்கும் விதமாக இருக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளார்.

முதல்வர் ஆய்வுக்கூட்டம்
தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில் இன்று மே 25ஆம் தேதி காலை, தலைமைச் செயலகத்தில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்தும், குற்ற வழக்கினை விரைவுபடுத்துவது குறித்தும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை, விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்தும், காவல்துறை, சமூகநலத்துறை மற்றும் அரசு தலைமை வழக்கறிஞருடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

முதல்வர் விஜய் அறிவுறுத்தல்
அப்போது, பாலியல் குற்ற வழக்கினை விரைவாக நடத்தி, குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்றுத்தர முதலமைச்சர் விஜய் வலியுறுத்தினார். வழக்கினை முறையாக நடத்தி, கடும் தண்டனை பெற்றுத்தருவது குற்றச் செயல்களில் ஈடுபடத் திட்டமிடுவோரைத் தடுக்கும் விதமாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளார்.