Also Watch
Read this
By: Manigandan Raja

கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கரடிகளின் நடமாட்டம் கணிசமாக அதிகரித்து வருகிறது. உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் கரடிகள், அவ்வப்போது குடியிருப்பு பகுதிகளிலும் புகுந்து விடுகின்றன.
இந்த நிலையில் கடந்த ஒரு மாத காலமாக பகல் மற்றும் இரவு நேரங்களில் கோத்தகிரி அருகே கன்னிகா தேவி காலனி கிராமத்தில் பெரியகரடி ஒன்று உலா வந்தது. அந்தக் கரடி கிராம மக்களை வீட்டின் வளர்ப்பு நாய் கரடியை துரத்தியது.
அந்த கிராம மக்கள் இதையடுத்து அவர்கள் சத்தம்போட்டு கரடியை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். பின்னர் கரடி அருகே உள்ள தேயிலை தோட்டம் வழியாக வனப்பகுதிக்குள் சென்றது இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் இந்த கரடிகள் அக்கிராம மக்களை யாரையாவது தாக்கும் முன் வனத்துறையினர் கரடிகளை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வேண்டுமென்று கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved