Also Watch
Read this
By: Manigandan Raja

விழுப்புரம் நாயக்கன் தோப்பு பகுதியில் அருந்ததியர் அம்மன் கோயில் உள்ளது, ஆடி மாத திருவிழா அருந்ததியர் தெருவில் மாரியம்மன் கோவில் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வந்த நிலையில், அருந்ததியர் தெருவை சேர்ந்த பிரகாஷ் என்பவர் அந்த பகுதியில் நேற்று முந்தினம் வேகமாக மோட்டார் சைக்கிள் ஓட்டிச் சென்றதாக கூறப்படுகிறது.
அதே பகுதியில் வசித்து வந்த பட்டியல் இனத்தை சார்ந்த 4 பேர் இரவு பிரகாஷ் வாகனம் நேற்று ஓட்டியது குறித்து வீட்டில் இருந்த பிரகாஷை கோயில் அருகே பரத், அபி, விஷ்ணு, கோகுல் ஆகிய நான்கு பேரும்
வரவழைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு பின்னர் அவர்கள் வைத்திருந்த கத்தியால் பிரகாஷை தலையில் வெட்டியதாக கூறப்படுகிறது.
சம்பவ இடத்தில் பிரகாஷ் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து உயிருக்கு போராடிய நிலையில் பரத் உட்பட நான்கு பேரும் அங்கிருந்து மோட்டார் சைக்கிள் தப்பி ஓடினர், இதனைக் கண்டு அதிர்ச்சடைந்த அக்கம்பக்கத்தினர் வெட்டுப்பட்ட பிரகாஷை முண்டியம்பாக்கம் அரசு மருத்து கல்லூரியில் மருத்துவமனைக்கு தீவிர சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த விழுப்புரம் மேற்கு காவல் நிலைய காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்ட போது அங்குள்ள பெண்கள் மற்றொரு தரப்பால் எங்களுக்கு ஆபத்து வரும் என ஏற்கனவே நாங்கள் கூறிய நிலையில் காவல்துறை இந்தப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபடவில்லை என குற்றம் சாட்டினர்.

மேலும் அருந்ததியர் மக்கள் தனியாக கோயில் திருவிழா நடத்துவது பட்டியல் இன மக்களுக்கு பிடிக்கவில்லை என்பதால் இதனை மனதில் வைத்துக் கொண்டு கஞ்சா போதையில் இது போன்ற கொலை வெறி தாக்குதலை நடத்தியதாக குற்றம் சாட்டினார்.
இந்நிலையில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய கோரி அருந்ததியர் இன மக்கள் விழுப்புரம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மேற்கு காவல் நிலையம் எதிரே திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி குற்றவாளிகளை விரைந்து கைது செய்வதாக உறுதி அளித்ததை எடுத்து மறியல் கைவிடப்பட்டது.
இருப்பினும் குற்றவாளிகளை கைது செய்யும் வரை தாங்கள் இந்த இடத்தை விட்டு நகர மாட்டோம் என விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்தை முற்றுகையிட்டு நீண்ட நேரம் காத்திருந்தனர், அதிகம் பெண்கள் மற்றும் குழந்தைகள் இருந்ததால் காவல்துறையினர் நிச்சயம் குற்றவாளிகளை குண்டத் தடுப்பு சட்டத்தில் கைது செய்வதாக உறுதி அளித்ததை அடுத்து முற்றுகையை கைவிட்டு பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு சென்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved