Also Watch
Read this
By: Manigandan Raja

தூத்துக்குடியில் காவல் நிலையத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்த வாலிபர் அருணாச்சலத்தின் குடும்பத்தை அவரது இல்லத்தில் சந்தித்து திமுக துணை பொது செயலாளர் கனிமொழி எம்பி மற்றும் முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் ஆறுதல் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தமிழக வெற்றிக்கழக வழக்கறிஞரால் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் லிங்க குமார் குடும்பத்தையும் சந்தித்து ஆறுதல் தெரிவித்து நடந்த சம்பவங்களை கேட்டறிந்தனர் இதைத்தொடர்ந்து தூத்துக்குடி அரசு மருத்து கல்லூரி மருத்துவமனையில் வைத்து திமுக துறை பொதுச் செயலாளரும் கனிமொழி எம் பி செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர்
கூறுகையில்.
லிங்க குமார் என்பவருக்கு சொந்தமான அவருடைய இடத்தில் கட்டி இருக்கக்கூடிய கடையை இடிக்க வேண்டும் இடத்தை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று வழக்கறிஞர் தாஸ் என்பவர் அந்த குடும்பத்திற்கு தொடர்ந்து மிரட்டல் விடுத்துக் கொண்டிருக்கிறார் அது மட்டும் இல்லாமல் போலீசில் புகார் அளிக்க லிங்கக்குமார் பலமுறை முயற்சி செய்திருக்கிறார் ஆனால் காவல்துறை அதை எடுத்துக் கொள்ள தயாராக இல்லை.
குற்றம் நடந்த அன்று அந்த லிங்க குமார் அவர்களுடைய கடை கட்டி இருக்கக்கூடிய இடத்திற்கு ஜேசிபி எல்லாம் கொண்டு வந்து தாஸ் என்ற வழக்கறிஞர் அவரோடு பல பேரை அழைத்துக் கொண்டு வந்து கடையை இடித்து இருக்கிறார்கள் அதை தடுக்க வந்த அவர் லிங்க குமார் மற்றும் அவரது மனைவி 19 வயது மகள் 16 வயது மகன் அவர்கள் அனைவரையும் தாக்கப்பட்டுள்ளார்கள் எஃப் ஐ ஆர் இல் யார் தாக்கினார்கள் என்று போடவில்லை.
அது மட்டும் இல்லாமல் துப்பாக்கியை கொண்டு மிரட்டியதாக லிங்க குமார் தெரிவிக்கிறார் ஆனால் எஃப் ஐ ஆர்ரல் அதை போடுவதற்கு காவல்துறை மறுக்கிறது என லிங்கு குமார் குற்றம்சாட்டி உள்ளார் தாக்கப்பட்ட சிறுவன் 16 வயது 18 வயது கூட ஆகவில்லை சிறுவர்களுக்கு எதிரான குற்றம் பதியப்பட வேண்டும் அந்த அடிப்படையில் தாஸ் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் அதையும் காவல்துறை செய்யவில்லை அது மட்டுமல்லாமல் அவருடைய மகள் மோசமாக கத்தி கம்பியால் தாக்கியுள்ளார்கள் காயம் ஏற்பட்டுள்ளது.

இது எதுவுமே நடவடிக்கை எடுக்கவோ நியாயமாக எஃப் ஐ ஆர் பதிவு பண்ணவும் கிடையாது ஏனென்றால் அவர் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர் தமிழக வெற்றி கழகத்தை சேர்ந்தவர் என்று கூறி வருகிறார் இதன் காரணமாக காவல்துறை அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க தயாராக இல்லை.
இங்கே வருவதற்கு முன்பாக நாங்கள் லாக்கப்பில் இறந்த அருணாச்சலம் அவர்கள் வீட்டுக்கு சென்று அவர்கள் குடும்பத்தை சேர்ந்தவர்களை சந்தித்துவிட்டு வந்தோம் அதுவும் மிகவும் மர்மமான முறையில் எந்த தெளிவும் இல்லாமல் என்ன நடந்தது என்று பெற்றோர்களுக்கு தெரியாமல் ஒரு மூடு மந்திரமாக தான் பல கதைகள் ஒவ்வொரு நேரமும் ஜோடிக்கப்படுகிறது.
ஒவ்வொரு முறை யாராவது தாக்கப்படும்போது கன்னியாகுமரியில் நடந்த சம்பவமாக இருக்கட்டும் இங்கே இருக்கட்டும் அந்த குடும்பத்தை சேர்ந்தவர்களை குற்றவாளிகளை அவர்கள் தவறான நடவடிக்கையில் ஈடுபட்டவர்களை போல பல கதைகள் ஜோடிக்கப்படுகின்றன அருணாச்சலத்துடன் குடும்பத்தில் உள்ளவர்கள் தொடர்ந்து பயமுறுத்தி காவல்துறை உங்கள் மேல் வழக்கு போடுவோம்.
நியாயம் கேட்டு போராடினால் உங்கள் கைது செய்வதற்கு தயங்க மாட்டோம் என்று சொல்கிறார்கள் என்று அவர்கள் பயத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கிற சூழ்நிலை உள்ளது பிள்ளையை இழந்த குடும்பம் பயத்தோடும் அச்சத்தோடும் வாழ்ந்து கொண்டிருக்கிற சூழ்நிலையும் பார்க்கிறோம் இது அத்தனையும் தாண்டி காவல்துறையை நேரடியாக வைத்துள்ள வைத்துக் கொண்டிருக்கிற தமிழக முதலமைச்சர் வாய் திறக்கவில்லை.
இதுவும் லிங்கக்குமார் மிக மோசமாக பாதிக்கப்பட்டு இருக்கிறது எஃப் ஐ ஆர் கூட பதிவு செய்ய ஆளுங்கட்சி ஆளுங்கட்சி சேர்ந்தவர் ஒருவர் ஈடுபட்டுள்ளார் என்ற ஒரே காரணத்திற்காக தூத்துக்குடியில் உள்ள காவல்துறை அவருக்கு எதிராகவே செயல்பட்டு கொண்டிருக்க கூடிய சூழலை பார்க்கிறோம் இந்த நாட்டில் சட்டம் ஒழுங்கு காவல்துறை என்ற ஒன்று இருக்கா இல்லையென்றால் அது சில பேருக்காக மட்டும் செயல்படக்கூடிய ஒன்றாக மாறிவிட்டதா 70 நாட்களில் என்பது எனக்கு தெரியவில்லை.
ஒரு நாளைக்கு எத்தனை நடக்கும் என்று கணக்கு வழக்கு இல்லாத சூழலில் தான் இந்த நாடு போய் கொண்டிருக்கிறது இதற்கும் அமைதி தான் நமக்கு பதிலாக கிடைக்கிறது சிவகங்கை மாவட்டத்தில் அஜித்குமார் லாக்கபில் இறக்கும்போது சாரி சொன்னா போதாது மன்னிப்பு கேட்டால் போதுமா எல்லாம் கேட்டார் அந்த மன்னிப்பை கூட இன்று இருக்கக்கூடிய முதலமைச்சர் கேட்க கேட்க தயாராக இல்லை நேரடியாக அங்கு அமைச்சர்
அனுப்பப்பட்டார் .
அந்த குடும்பத்துக்கு நியாயம் வழங்கப்பட்டது குற்றத்தில் ஈடுபட்டவர்கள் அத்தனை பேரும் பதவியில் இருந்து நடவடிக்கை எடுக்கப்பட்டது அந்த குடும்பத்திற்கு முதலமைச்சர் நேரடியாக பேசி ஆறுதல் சொன்னார் மன்னிப்பு
கேட்டார் ஆனால் இன்றைக்கு அவர்களுடைய பேசக்கூட இல்லை பதில் கூட சொல்ல யாரும் தயாராக இல்லை.