news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மேகதாது விவகாரம் - மறியலுக்கு அழைப்பு விடுத்த கன்னட அமைப்பு
tv

Also Watch

மேகதாது விவகாரம் - மறியலுக்கு அழைப்பு விடுத்த கன்னட அமைப்பு

ஒசூர்,கிருஷ்ணகிரி

10

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
கிருஷ்ணகிரி

கர்நாடக எல்லையில் கன்னட அமைப்பினர் விடுத்துள்ள திடீர் சாலை மறியல் போராட்ட அழைப்பால், பெங்களூரு செல்லும் தமிழக பேருந்துகள் அனைத்தும் ஓசூர் எல்லையிலேயே நிறுத்தப்பட்டுள்ளன. எல்லையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் கடும் பதற்றம் நிலவி வருகிறது.

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் உடனடியாக அணை கட்ட கர்நாடக அரசை வலியுறுத்தியும், இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வரும் தமிழ்நாட்டை கண்டித்தும் "கன்னட ஜாக்கிருதி வேதிகே" என்ற கன்னட அமைப்பு இன்று
கர்நாடக-தமிழக எல்லைப் பகுதியில் மாபெரும் சாலை மறியல் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

இந்த போராட்ட அழைப்பின் எதிரொலியாக, அசம்பாவிதங்களைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இன்று அதிகாலை 4 மணி முதலே தமிழகத்தில் இருந்து பெங்களூரு நோக்கிச் செல்லும் அனைத்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக (TNSTC) பேருந்துகளும் ஓசூர் வரை மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன.

ஓசூரைத் தாண்டி கர்நாடகாவிற்குள் தமிழகப் பேருந்துகள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. கிருஷ்ணகிரி காவல்துறை உத்தரவின் பெரில் தர்மபுரி மண்டல தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் அறிவுறுத்தலின் படி, பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, மறு உத்தரவு வரும் வரை பெங்களூருவுக்குப் பேருந்துகள் இயக்கப்படாது என காவல்துறை அதிரடியாக அறிவித்துள்ளது.


நிலைமை முற்றிலும் சீரான பிறகே தமிழகப் பேருந்துகள் எல்லையைத் தாண்டிச் செல்லும் எனப் போக்குவரத்துத் துறை வட்டாரங்கள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளன. மறியல் போராட்டத்தால் மாநில எல்லையில் இரு தரப்பிற்கும் இடையே பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.

எனவே, சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கவும், வன்முறைச் சம்பவங்களைத் தடுக்கவும், தமிழக-கர்நாடக எல்லையான ஜூஜூவாடி மற்றும் அத்திப்பள்ளி பகுதிகளில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு தீவிர பாதுகாப்புப்
பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தமிழகப் பேருந்துகள் நிறுத்தப்பட்டாலும், கர்நாடக மாநில அரசுப் பேருந்துகளும் (KSRTC), தனியார் பேருந்துகளும் வழக்கம் போல எல்லையைக் கடந்து இயங்கி வருகின்றன. தமிழகப் பயணிகளின் சிரமத்தைக் குறைக்கும் வகையில், கூட்ட நெரிசல் மற்றும் சூழ்நிலைக்குத் தகுந்தாற்போல் ஓசூர் மாநகரப் பேருந்துகளின் சேவையை அதிகரிக்க போக்குவரத்துத் துறை திட்டமிட்டுள்ளது.

அத்திப்பள்ளி வரைஇயக்கப்படும் 16 மாநகர பேருந்துகள் வழக்கம் போல் இயங்கி வருகிறதுசூழ்நிலைக்கு தகுந்தார் போல் அந்தப் பேருந்துகள்தமிழக எல்லை வரை இயக்க வாய்ப்புள்ளது எல்லையில் தொடர்ந்து பதற்றம் நீடிப்பதால், பெங்களூரு செல்லும் பயணிகள் மாற்றுப் பேருந்துகளை நாடிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

தனியார் பேருந்துகள் கர்நாடக பேருந்துகள் தொடர்ந்து இயக்கப்படுவதால் பயணிகள் எந்தவித சிரமம் என்று சென்று வருகின்றனர்இரு மாநில போலீசாரும் எல்லையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கல்குவாரிகளை மூட வலியுறுத்தி 38 கிராம மக்கள் தீர்மானம்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved