news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சீமானும், சரத்குமாரும் இணைந்திருந்தால் நிலைமையே வேறு
tv

Also Watch

சீமானும், சரத்குமாரும் இணைந்திருந்தால் நிலைமையே வேறு

சீதபற்பநல்லூர், நெல்லை

4

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
சரத்குமார் பிறந்தநாள் விழா

நெல்லை மாவட்டம் சீதபற்பநல்லூரில் நடைபெற்ற சரத்குமார் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேசுகையில், 72 வயதானாலும் என்னாத்தாலும், செயலாலும் சரத்குமார் அவர்களுக்கு 27 வயது தான். மாப்பிள்ளை சீமான் உட்பட பல்வேறு அரசியல் கட்சியின் முக்கிய தலைவர்கள் அனைவரும் ஒரே மேடையில் இருப்பது அழகாக உள்ளது.

இதேபோன்ற மேடை இரண்டு மாதங்களுக்கு முன்பு அமைந்திருந்தால், தமிழகத்தின் அரசியல் நிலைமை எப்படி இருந்திருக்கும்.இனி வரும் காலங்களில் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். சிலர் எடுத்த எடுப்பிலேயே முதல்வராகி விடுகிறார்கள்.

ஆனால், சரத்குமார் முதல்வராக வர அனைத்து தகுதிகளையும் கொண்டவர். ஆண்டவர் இப்போது வேண்டாதவர்களை பதவியில் வைத்துவிடுகிறார். இது கலிகாலம். இப்போது இருக்கும் காங்கிரஸ் உண்மையான காங்கிரஸ் கட்சியே அல்ல.இது இந்திரா காங்கிரஸ்.அந்த காங்கிரஸ் காமராஜரை அவமானப்படுத்தியது. தற்போது காங்கிரஸ் கட்சியும் ராகுல் காந்தியும் காக்க்ரோச்சின் பின்னால் ஒளிந்து கொண்டிருக்கிறது.

இப்படி ஒரு இந்தியாவின் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இருக்கிறார். ஆன்டி லீக் பேப்பர் பில் 2026 இளைஞர்கள், மாணவர்களுக்காக கொண்டு வரப்பட்டுள்ளது. வருங்கால மாணவர் சமுதாயத்திற்காக பிரதமர் மோடி இந்த திட்டத்தை செயல்படுத்தியுள்ளார்.

ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் மாணவர்களின் நலம் கருதி ராஜினாமா செய்துள்ளார். வினாத்தாளை கசிய விடுவர்களுக்கு கடுமையான சட்டம் பத்தாண்டு சிறை தண்டனை விதித்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் பேரம் பேசுகின்றன.

ஆனால், ஒரு நயா பைசா கூட வாங்காமல் தேசிய நீரோட்டத்தில் சேர்ந்தவர் சரத்குமார். அவருக்கு தேசிய அளவில் பொறுப்பு கொடுத்தால்தான் நன்றாக இருக்கும். அகில இந்திய பாஜக தேர்தல் வரவுள்ள நிலையில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சரத்குமாருக்கு பதவிகள் தானாகவே தேடி வரும்" என்றார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கல்குவாரிகளை மூட வலியுறுத்தி 38 கிராம மக்கள் தீர்மானம்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved