Also Watch
Read this
By: Manigandan Raja

சேலம் மாவட்டம், ஆத்தூர் பஸ் ஸ்டாண்ட் நதிக்கரையோரம் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் திருக்கோவிலில் ஆடி திருத்தேர் திருவிழா கடந்த 20ம் தேதி காப்பு கட்டுதலோடு தொடங்கியது. நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் அபிஷேகம் நடைபெற்று வரும் நிலையில் தீர்த்த குட ஊர்வலம் விமர்சையாக நடைபெற்றது.

ஏராளமான பெண்கள் தீர்த்தகுடம் தலையில் சுமந்து பங்கேற்றனர். ஊர்வலமானது மேளதாளங்கள் முழங்க தாயுமானவர் தெரு கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் முக்கிய சாலைகள் வழியாக சென்று கோவிலை வந்தடைந்தது .
தொடர்ந்து கோவில் வளாகத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்த பெண்கள் அம்மனுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது பின்னர் வண்ண மலரால் அலங்கரிக்கப்பட்ட பெரிய மாரியம்மன் க்கு மகா தீபாரதனையும் நடைபெற்றது.
இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் விழா குழு சார்பாக அன்னதானமும் வழங்கப்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved