Also Watch
Read this
By: Manigandan Raja

மக்கள் நிம்மதி :
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பட்டாபிராம் வள்ளலார் நகர் 3வது தெரு உள்ளிட்ட 5க்கு மேற்பட்ட தெருகளில் இரவு நேரங்களில் குறைந்த அழுத்த மின்சாரம் காரணமாக குடியிருப்பு பகுதிகளில் மின்வெட்டு பிரச்சனை நிலவியது.
இது குறித்து அப்பகுதி மக்கள் தவெக நிர்வாகிகள் மூலமாக சட்டமன்ற உறுப்பினரிடம் தெரியப்படுத்தினர்.மேலும் நேரடியாகவும் பொதுமக்கள் புகார் அளித்திருந்தனர்.இதனை கேட்டுக்கொண்ட சட்டமன்ற உறுப்பினர் ரமேஷ் மின்வாரிய அரிதாரிகளிடம் மின் வெட்டு பிரச்சினையை தீர்க்க உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து மின்வாரிய அதிகாரிகள் ஒரே நாளில் புதிய மின்கம்பம்,புதிய டிரான்ஸ்பார்மர் அமைத்து குறைந்த மின் அழுத்த பிரச்சனைக்கு தீர்வு ஏற்படுத்தினார்.இதனை மக்களுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிலையில் கடந்த பத்து நாட்களாக நிலவி வந்த மின்வெட்டு பிரச்சனையின் போது சட்டமன்ற உறுப்பினர் யாரும் இங்கு வரவில்லை எனவும் யாரோ கொண்டுவந்தது அவருக்காக காத்திருக்க வேண்டும் உடனடியாக டிரான்ஸ்பார்மறை ஆன் செய்யுங்கள் என அப்பகுதி மாற்று கட்சியினர் மின்சார வாரிய அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து சற்று கால தாமதமாக வந்த சட்டமன்ற உறுப்பினர் ரமேஷ் டிரான்ஸ்பார்மரை மக்கள் பயன்பாட்டிற்கு ரிப்பன் வெட்டி துவங்கி வைத்தார்.
இப்பொழுது கால தாமதமாக வந்ததற்காக வீடு தேடி சென்று மன்னிப்பு கோரினார்.அவரிடம் அப்பகுதி மக்கள் தங்கள் குறைகளை முறையிட்டனர்.அதனை கேட்டுகொண்டார் உங்களுடன் இருந்து அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்து வைப்பதாக உறுதியளித்து சென்றார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved