news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம்
tv

Also Watch

tv

Read this

டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம்

குறியமங்கலம், கடலூர்

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
பெண்கள் போராட்டம்

பெண்கள் போராட்டம்  : 

புவனகிரி அருகே உள்ள குறியாமங்கலம் கீழ மணக்குடி சாலையின் ஓரம் டாஸ்மாக் கடைஎண் 25 13 செயல்பட்டு வருகிறது இந்தக் கடையில் மது குடிக்க குறியாமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதி மது பிரியர்கள் வந்து மது வாங்கிச் செல்வது வழக்கம் அதன்படி இன்று மது கடையில் மது வாங்கும் பொழுது.

குறியாமங்கலம் மற்றும் புவனகிரி அருகே உள்ள தம்பிக்கு நல்லாம்பட்டினம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியதாக கூறப்படுகிறது
இதனால் ஆத்திரமடைந்த குறியாமங்கலம் கிராம பொதுமக்கள் பெண்கள் டாஸ்மாக் கடையை நிரந்தரமாக இழுத்து மூட கோரி.

கடை முன்பு திரண்டு முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர் தகவல் அறிந்து வந்த புவனகிரி போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் இதுகுறித்து கிராம பொதுமக்கள் பெண்கள் தெரிவிக்கும் பொழுது இந்தக் கடை சாலையின் ஓரத்தில் அமைந்துள்ளதால் பெண்களாகிய நாங்கள் நடந்து செல்ல கூட அச்சம் ஏற்பட்டு வருகிறது.

சாலையிலே அமர்ந்து மது குடிப்பதால் பய உணர்வும் ஏற்பட்டு வருவதாகவும் உடைந்த பாட்டில் துண்டுகளால் ஆபத்து நேர்வதாகவும் தெரிவித்தனர் இது குறித்து உரிய புகார் அளிக்கும்படி புவனகிரி போலீசார் பொதுமக்களை கேட்டுக்கொண்டார் புகாரின் பேரில் இனி நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தார்.

இந்த கடையை நிரந்தரமாக மூடுவது தான் பல்வேறு பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வாக இருக்கும் என பகுதி பொதுமக்கள் பெண்கள் கருதுகின்றனர் . எனவே மாவட்ட நிர்வாகம் பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று கடையை நிரந்தரமாக மூட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

Related Link
மின்வெட்டு சரி செய்யப்பட்டதால் மக்கள் நிம்மதி

மின்வெட்டு சரி செய்யப்பட்டதால் மக்கள் நிம்மதி

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அரசு மருத்துவமனையை ஆய்வு செய்த அமைச்சர் தென்னரசு

2
10 mins agoshare
ஆய்வு செய்த அமைச்சர் தென்னரசு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved