Also Watch
Read this
By: Manigandan Raja

கவர்ந்த காத்தாடித் திருவிழா :
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தற்பொழுது கோடை சீசன் துவங்கி உள்ள நிலையில் சுற்றுலா பயணிகள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுகிறது.
மேலும் தற்போது கோடை விழாவும், மலர் கண்காட்சியும் நடைபெற்று வரும் நிலையில் கொடைக்கானலுக்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் விதமாக கலை நிகழ்ச்சிகள் விளையாட்டு போட்டிகள் ஆகியவை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் மேலும் கூடுதலாக இன்று கொடைக்கானல் மேல்மலை கிராம மன்னவனூர் பகுதியில் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக காத்தாடி திருவிழா இன்று நடைபெற்றது.
மேலும் இங்குள்ள பசுமையான புல்வெளி சூழலில் வண்ண வண்ண கண்கவர் காத்தாடி விடும் நிகழ்வு நடைபெற்றது. இதில் பல்வேறு வடிவ டிராகன், இந்திய தேசியக் கொடி மற்றும் குழந்தைகளை கவரக்கூடிய பொம்மைகள் ஆகிய காத்தாடிகள் வண்ண வண்ண நிறங்களில் வானில் பறக்க விடப்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved