Also Watch
Read this
அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேரின் ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்பட்டதாக சபாநாயகர் அறிவித்து உள்ளார். ராஜினாமா கடிதம் முறையாக இருந்ததால் விதிகளின்படி உடனடியாக ஏற்கப்பட்டதாக விளக்கம் அளித்து உள்ளார்.
மரகதம் குமரவேல் தலைமையில்...
மதுராந்தகம் எம்எல்ஏ மரகதம் குமரவேல் தலைமையில் பெருந்துறை எம்எல்ஏ ஜெயக்குமார், தாராபுரம் எம்எல்ஏ சத்தியபாமா ராஜினாமா செய்த நிலையில், இதனை ஏற்றுக் கொண்டதாக, சபாநாயகர் அறிவித்து உள்ளார். எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த 3 பேரும் அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை சந்தித்த நிலையில், தவெகவில் அதிகாரபூர்வமாக இணைந்தனர்.

வேலுமணி ஆதரவாளர்கள்
வேலுமணி தரப்புக்கு ஆதரவாக இருந்த அதிமுக எம்எல்ஏக்கள் மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா ஆகிய மூவரும் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, அமைச்சர் ஆதவ் அர்ஜுனா முன்னிலையில் தவெகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். அதிமுகவின் உட்கட்சிப் பூசல் உச்சகட்டத்தை எட்டிய நிலையில், அக்கட்சியின் எம்எல்ஏக்கள் மூன்று பேர் தங்களது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து, தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாகி உள்ளது.



காலையில் இருந்தே பரபரப்பு
வேலுமணி தரப்புக்கு ஆதரவாக இருந்து வந்த மதுராந்தகம் எம்எல்ஏ மரகதம் குமரவேல், பெருந்துறை எம்எல்ஏ ஜெயக்குமார், தாராபுரம் எம்எல்ஏ சத்யபாமா ஆகியோர் ராஜினாமா செய்வதாக, இன்று மே 25ஆம் தேதி, சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரை சந்தித்து 3 எம்எல்ஏக்களும் ராஜினாமா கடிதங்களை வழங்கினர். இன்று மாலைக்குள் ஆய்வு செய்து ராஜினாமா ஏற்பு குறித்து அறிவிக்கப்படும் என சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் கூறியிருந்த நிலையில், கூறியபடியே ராஜினாமாவை ஏற்றுக் கொள்வதாக, மாலையில் சபாநாயகர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

இடைத்தேர்தல் எப்போது?
அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேர் ராஜினாமா செய்துள்ள நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 230 ஆக குறைந்து உள்ளது. ஏற்கெனவே திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ பதவியை முதல்வர் ஜோசப் விஜய் ராஜினாமா செய்த நிலையில், இந்த ராஜினாமாக்கள் ஏற்கப்பட்ட நிலையில், 4 சட்டப்பேரவைத் தொகுதிகள் காலியாகி உள்ளன. ஆறு மாதத்திற்குள் இடைத்தேர்தல் அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.