news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் வியாபாரிகளுக்கு அறிவுரை
tv

Also Watch

சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் வியாபாரிகளுக்கு அறிவுரை

ஒரு நாள் எல்லாம் விழுந்துவிடும்

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ஜே.சி.டி பிரபாகரன்

வியாபாரிகள் தேவையற்ற விஷயங்களில் ஈடுபடக்கூடாது

அம்பத்தூர் வியாபாரி சங்கத்தின் 60வது ஆண்டு விழா அம்பத்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர்  ஜே.சி.டி பிரபாகரன்,அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் பாலமுருகன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி கலந்து கொண்ட இருவரும் அம்பத்தூர் வியாபாரி சங்கத்தின் 60ஆவது ஆண்டு விழாவின் சிறப்பு மலரை (Book) வெளியிட்டனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இருவருக்கும் நினைவு பரிசுகள்
வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் அம்பத்தூர் வியாபார சங்கத்தினர் 300-க்கும் மேற்பட்டோர் தங்களது குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய சட்டப்பேரவை தலைவர் ஜே.சி.டி பிரபாகரன், அனைத்தையும் முடிவு செய்துவிட்டு தேர்தலை சந்தித்த வாக்காளர்களை முதன் முறையாக இந்த தேர்தலில் தான் பார்த்தேன். நான் ஆயிரம் விளக்கு தொகுதியில் இருக்கும்பொழுது என்னைக் குறித்து பொதுமக்களிடம் தெரிவித்தபோது, உங்களைக் குறித்து எதுவும் பேச வேண்டாம் விசில் சின்னத்தில் நின்றால் நாங்கள் ஓட்டு
போடுகிறோம் என கூறினர்.

ஆயிரம் விளக்கு தொகுதியில் யாருக்கு செல்வாக்கு அதிகம் என உங்களுக்கே தெரியும் ஆனால் திமுகவில் முக்கிய பொறுப்பில் உள்ள மகளிர் எங்கள் குடும்பத்தில் உள்ள அனைத்து ஓட்டும் உங்களுக்கு தான் என கூறினர். நான் அதற்கான காரணத்தை கேட்டேன் முன்பெல்லாம் மக்கள் எங்களுடைய பேச்சை கேட்பார்கள்.ஆனால் இப்பொழுது மக்களுடைய பேச்சை நாங்கள் கேட்க வேண்டி உள்ளது என கூறினர்.

அரசியல் தலைவர்கள் சொல்வதை மக்கள் கேட்க தயாராக இல்லை. தேவாலயத்தில் உள்ள பாதிரியார்கள் மசூதியில் உலமாக்கள் கோவில்களில் உள்ள பூசாரிகள் என எந்த மத தலைவர்கள் சொல்லியும் மக்கள் கேட்காமல் வாக்களித்த முதல் தேர்தல் இதுதான் எனக் கூறினார்.

ஜாதி மத பேதமில்லாமல் அவர் வெற்றி பெற்றுள்ளார். அரசியல் வித்தகர்கள், விமர்சகர்களை காட்டிலும் அறிவு மிக்கவர்கள் நம்முடைய மக்கள்தான். எதை எப்போது செய்ய வேண்டும் என்று தெரிந்து தான் தற்போது நல்ல ஆட்சியை அமைத்துக் கொடுத்துள்ளனர்.

ஒரு அரசாங்கத்திற்கு வியாபாரிகள் தான் நாடி போன்றவர்கள் மக்களோடு நேரடியாக பழகக் கூடியவர்கள். அவர்கள் தான், மக்கள் என்ன நினைக்கிறார்கள் யாருக்கு ஓட்டு போட போகிறார்கள் என்பது அவர்களுக்கு தான் தெரியும். வியாபாரிகள் அரசுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் ஆட்சிக்கு பக்கபலமாக இருக்கிறேன் என சங்கடத்தை கொடுத்து விடக்கூடாது.

தேவையற்ற விஷயங்களில் ஈடுபடக்கூடாது வியாபாரிகளின் உரிமைகளுக்காக கேட்கலாம் தவறில்லை ஆனால் அரசாங்கத்தை சங்கடப்படுத்த வேண்டுமென நினைக்கு கூடாது. இப்பொழுது
செல்வாக்கு உள்ளவர்களாக நினைக்கலாம் ஆனால் ஒரு நாள் எல்லாம் விழுந்துவிடும். நாம் அப்படி இருக்கக் கூடாது. ஒரு நிலைப்பாடு எடுத்து ஒரு பக்கம் சாயக்கூடாது எனது அன்பான வேண்டுகோளாக நான் வைக்கிறேன் எனக் கூறினார்.

சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகரன் பேச்சை,அருகில் அமர்ந்திருந்த வியாபாரிகள் சங்க பேரவை தலைவர் விக்கிரமராஜா தலைகுனிந்தபடி கேட்டுக் கொண்டிருந்தார். வியாபாரிகள் சங்கத் தலைவர் விக்கிரமராஜா, தி.மு.க ஆதரவாளர் என்பதும், அவரது மகன் பிரபாகர் ராஜா தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ என்பதும் தெரிந்தே,அவரை எச்சரிக்கும் நோக்கில் சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் பேசியது கூட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.

Related Link
முத்துமாரியம்மன் கோவிலில் தேர் திருவிழா கோலாகலம்

முத்துமாரியம்மன் கோவிலில் தேர் திருவிழா கோலாகலம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நாளை எந்தெந்த துறைகளுக்கு மானிய கோரிக்கை?

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved