Also Watch
Read this
By: Manigandan Raja

ரஜினியை வம்புக்கு இழுக்கும் ஸ்டாலின் :
மேலூர் அதிமுக சட்டமன்ற வேட்பாளர் அன்னபோஸ்ட் ஆக மிகப்பெரிய வெற்றி பெறுவார் என்பதால் எதிர் கூட்டணியினரால் வேட்பாளரை அறிவிக்க முடியாத சூழ்நிலை, அவரை
எதிர்த்து போட்டியிட யாருக்கும் தகுதி இல்லை.
மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக சார்பில் வேட்பாளர் அறிமுகம் மற்றும் செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா மேலூர் சட்டமன்ற உறுப்பினரும் வேட்பாளருமான பெரியபுள்ளான் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் பலர் கலந்து கொண்ட நிலையில் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அதிமுக வேட்பாளரும், மேலூர் சட்டமன்ற உறுப்பினருமான பெரியபுள்ளான் என்ற செல்வம் பேசும் போது. கடந்த ஐந்து வருடமாக எதிர்க்கட்சி உறுப்பினராக இருந்த பொழுதும் மேலூர் தொகுதிக்கு தன்னால் முடிந்த நலத்திட்டங்களை செய்து வந்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும் வரும் சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியை மிகப்பெரிய வெற்றி பெற்று எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பொறுப்பேற்றவுடன் மேலூர் தொகுதியில் தேவையான அனைத்து வளர்ச்சி திட்டங்களும் செயல்படுத்தப்படும் என அப்போது பேசினார்.
தொடர்ந்து கூட்டத்தில் பேசிய பின் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த ராஜன் செல்லப்பா பேசுகையில்...
"இதுவரை எதிர்க்கட்சிகள் மேலூருக்கு வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. மேலூர் அதிமுக வேட்பாளர் பெரியபுள்ளான் வெற்றி பெறுவார். அவரை எதிர்த்து யாரும் நிற்க தகுதி இல்லை என்ற சூழ்நிலையில் தான் யாரும் களம் காண தயாராக இல்லை. பெரியபுள்ளான் அன்னபோஸ்டாக வெற்றி பெறுவார்.
திமுக தலைவர் ஸ்டாலின் பாட்டு பாடி வாக்கு சேகரிப்பது குறித்த கேள்விக்கு, ஸ்டாலின் ஏற்கனவே சின்னத்திரை நடிகர், குறிஞ்சி மலர் என்ற நாடகத்தில் நடித்தவர். அவருக்கு இன்னும் அந்த ஆசை விடவில்லை.

பாட்டு பாடி பார்க்கிறார் ரஜினிகாந்த்தை வம்புக்கு இழுக்கிறார். திமுக தேர்தல் அறிக்கையில் எந்த விஷயமும் இல்லை. கடந்த முறை கொடுத்த வாக்குறுதி மீண்டும் வந்திருக்கிறது.
மக்கள் நம்பவில்லை .
மீண்டும் மீண்டும் அதை பொலிவூட்ட நினைக்கிறார். அது நடக்கவில்லை. செயற்கையாகத்தான் ஸ்டாலினுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது. இயற்கையாக எடப்பாடி பழனிச்சாமிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது.
அதிமுகவை அழிக்க நினைத்த யாரும் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை இயற்கையாகவே அதிமுகவுக்கு விசில் சப்தம் பார்த்துக்கொண்டே இருக்கிறது என்று அப்போது தெரிவித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved