Also Watch
Read this
By: Manigandan Raja

இராமேஸ்வரம் திருக்கோயிலில் ஆடித்திருக்கல்யாணம்,மாசி சிவராத்திரி முக்கிய விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் ஆடித்திருக்கல்யாண நிகழ்வு மிகவும் சிறப்பு வாய்ந்தது. கடந்த 5ம் தேதி அம்மன்சன்னதியில் உள்ள தங்க கொடிமரத்தில் கோயில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க கன்னி லக்கனத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. பின்னர் அம்பாளுக்கு 16 வகையான சிறப்பு தீபாராதனை செய்யப்பட்டது.
தொடர்ந்து இன்று 5ம் நாளான ஸ்ரீ பர்வதவத்தினி அம்பாளுக்கு நாயக்கர் மண்டபத்தில் சிறப்பு தீபாரதனை நடைபெற்ற பின்பு வெள்ளி யானை வாகனத்தில் எழுந்தருளி நான்கு ரத வீதிகள் வழியாக உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். கோவில் யானை ராமலட்சுமி, அம்பாள் வீதி உலா வரும் போது ஸ்ரீ பர்வதவர்த்தினி அம்பாளை தும்பிக்கையை உயர்த்தி வணங்கிய காட்சி அனைவரையும் மெய் சிலுக்க வைத்தது.
17 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் ஆடித்திருவிழா நிகழ்ச்சியில் முக்கிய நிகழ்வாக வரும் 16ஆம் தேதி திருக்கல்யாண உற்சவமும், 12ம் தேதி ஆடி அமாவாசையும் ,13ம் தேதி திருத்தேராட்டமும் நடைபெறும், அதே போல ஆடித்திருவிழாவில் 10நாட்கள் காலை மாலை என அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடைபெறும்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved