news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews திருவாரூரில் திடீர் கனமழை
tv

Also Watch

திருவாரூரில் திடீர் கனமழை

திருவாரூர்

3

By: Fyrose Banu

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
tvr

ஆகஸ்ட் மாதம் இறுதி நெருங்கிய போதும் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. குறிப்பாக எல் நினோ தாக்கம் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கடும் வெயில் வீசி வருகிறது. திருவாரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் 38 டிகிரிக்கும் அதிகமாக வெயில் சுட்டெரித்தது.

இதனால் பகல் நேரங்களில் வெயிலில் செல்லும் வாகன ஓட்டிகள் , தொழிலாளர்கள், விவசாயிகள் கடும் அவதி அடைந்தனர்‌. இந்த நிலையில் இன்று இரவு 9 மணி அளவில் திடீரென குளிர்ந்த காற்று வீசியது. இதனைத் தொடர்ந்து திருவாரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான புலிவலம், சேந்தமங்கலம், வண்டம்பாலை, கமலாபுரம், கண்கொடுத்தவணிதம், கூத்தாநல்லூர், மாங்குடி, மாவூர் மற்றும் அடியக்கமங்கலம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

'மங்கி குல்லா' அணிந்து வரும் கொள்ளையர்கள்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved