Also Watch
Read this
By: Fyrose Banu

மன்னார்குடியில் பள்ளி மாணவர் மாணவியரின் பன்முகத்தினை வெளிப்படுத்தும் வகையில் தஞ்சை கலை பண்பாட்டுத்துறை சார்பில் தமிழிசை விழா சிறப்பாக நடைபெற்றது. தஞ்சாவூர் மண்டலக் கலை பண்பாட்டு மையம் சார்பில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சக்திவேல் முருகன் கோவிலில் தமிழிசை விழா நடைபெற்றது.

இதில் திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி பகுதியை சேர்ந்த சவகர் சிறுவர் மன்ற மாணவ மாணவிகள் 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்று பங்கேற்றனர். பரதநாட்டியம், குரலிசை, போன்ற பல்வேறு வகை திறமைகளை மாணவர்கள் வெளிப்படுத்தினர்.
மேலும் எஸ்.ஆர்.வீரராகவன் குழுவினரின் இசை நிகழ்ச்சியும், வில்லிசை வேந்தர் நெல்லை ரவீந்திரன் தலைமையில் இசை சங்கமம் நிகழ்ச்சியும் மிருதங்கம் கஞ்சிரா இசை நிகழ்ச்சியில் நடைபெற்றது. பள்ளி மாணவர்களின் பன்முக திறனை வெளிப்படுத்தும் வகையில் நடைபெற்ற தமிழிசை விழாவில் மாணவ மாணவிகள் தங்களின் திறமையை சிறப்பாக வெளிப்படுத்தினர். தஞ்சாவூர் மண்டலக் கலை பண்பாட்டு மைய உதவி இயக்குனர் ராஜாராமன் தஞ்சை மண்டல கலை பண்பாட்டுத் துறை அதிகாரிகள் மாணவ மாணவியரின் பெற்றோர்கள் என ஏராளமானோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved