news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கல்யாணத்துக்கு மறுத்ததால் கொடூரம், முறைப்பெண்ணை கத்தியால் கிழித்த பயங்கரம்
tv

Also Watch

கல்யாணத்துக்கு மறுத்ததால் கொடூரம், முறைப்பெண்ணை கத்தியால் கிழித்த பயங்கரம்

உடம்பெல்லாம் குத்துப்பட்டு வழிந்தோடிய ரத்தம்

25

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே திருமணம் செய்து கொள்ள மறுத்த முறைப்பெண்ணை இளைஞர் கத்தியால் குத்தி கொ* செய்ய முயன்ற கொடூர சம்பவம் அரங்கேறி உள்ளது. உடம்பின் பல இடங்களில் குத்துப்பட்டு ரத்தம் வழிந்தோடிய நிலையில் அப்பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

தந்தை கண்டிப்பால்...
பண்ருட்டி அருகே காடாம்புலியூர் பகுதியை சேர்ந்தவர் பொறியியல் பட்டதாரி சந்தோஷ். இவர் சென்னையிலுள்ள கார்பரேட் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வரும் நிலையில், அதே பகுதியை சேர்ந்த தனது உறவின பெண்ணை காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது. அப்பெண்ணுக்கும் ஆரம்பத்தில் விருப்பம் இருந்த போதிலும் அவரது தந்தை கண்டிப்பினால் காதலை உதறி தள்ளிவிட்டு சந்தோஷடமிருந்து விலகியதாக சொல்லப்படுகிறது.

பெண்ணுடன் தகராறு
இந்த நிலையில், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அப்பெண் செல்லுமிடங்களுக்கு எல்லாம் சென்று சந்தோஷ் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இளைஞர் கெஞ்சலுக்கும் கொஞ்சலுக்கும் அப்பெண் மயங்காத நிலையில், தான் எடுத்த முடிவில் உறுதியாக இருந்ததாக கூறப்படுகிறது. அதனால் இருவருக்கும் இடையே அவ்வப்போது தகராறு முற்றியதாக சொல்லப்படும் நிலையில் விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வந்த இளைஞர் அப்பெண் வேலை பார்த்து வரும் மருந்தகத்துக்கு சென்று தகராறு செய்ததாக தெரிகிறது.

கொ* முயற்சி...
ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றிப்போனதால் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பெண்ணை சரமாரியாக குத்திக் கிழித்திருக்கிறார் அந்த இளைஞர். பெண்ணின் கழுத்து, முதுகு, இடுப்பில் குத்திய நிலையில், தடுக்க முற்பட்ட அவரது கைகளையும் கத்தி பதம் பார்த்திருக்கிறது. அப்பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு ஓடோடி வந்த அக்கம்பக்கத்தினர் கொடூரனிடமிருந்து பெண்ணை காப்பாற்றினர்.

பதைபதைக்க வைக்கும்...
பின்னர் மருந்தகத்துக்குள் வைத்து இளைஞரை பூட்டிய மக்கள் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். உடம்பெல்லாம் ரத்தம் வழிந்தோடிய நிலையில், அந்த பெண்ணை இருசக்கர வாகனத்தில் ஏற்றிக் கொண்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். காதல் என்ற பெயரில் இது போன்று நடக்கும் கொ*வெறித் தாக்குதல்கள் மனதை பதைபதைக்க வைக்கிறது.

Related Link
14 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை, தப்பியோடியவனை சுட்டுப்பிடித்த போலீஸ்

14 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை, தப்பியோடியவனை சுட்டுப்பிடித்த போலீஸ்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

குற்றச்சாட்டு எழுந்த நிலையில் நடிகர் விஜய் சேதுபதி விளக்கம்

26
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved