news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சாலையோர பள்ளத்தில் இறங்கி விபத்துக்குள்ளான லாரி
tv

Also Watch

சாலையோர பள்ளத்தில் இறங்கி விபத்துக்குள்ளான லாரி

கூடூர், திருவாரூர்

60

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Tiruvarur lorry

பள்ளத்தில் இறங்கி விபத்துக்குள்ளான லாரி :

திருவாரூர் மாவட்டம் முழுவதும் சம்பா நெல் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் விவசாயிகள் அறுவடை செய்த நெல் மூட்டைகளை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் திருவாரூர் அருகே கூடூர் பகுதியில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்திலிருந்து 300 நெல் மூட்டைகளை லாரி மூலமாக ஏற்றிக்கொண்டு வண்டாம்பாலை பகுதியில் உள்ள சேமிப்பு கிடங்கில் வைப்பதற்காக எடுத்துச் செல்லப்பட்டது.

அதற்கு முன்பாக திருவாரூர் தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள எடை மேடையில் எடை போடுவதற்காக நெல் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி வந்துள்ளது.

அப்பொழுது லாரியின் பிரேக் திடீரென பிடிக்காமல் போனதால் லாரியை ஓட்டி வந்த காளிதாஸ் லாரியை திருப்பி உள்ளார் அப்பொழுது அருகில் உள்ள பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் ஓட்டுநர் காளிதாஸ் சிறு காயங்களுடன் உயிர்த்தபினர்.குறிப்பாக லாரி பிரேக் பிடிக்காமல் சென்ற பொழுது தேசிய நெடுஞ்சாலையில் ஏராளமான வாகனங்கள் எதிரே வந்து கொண்டிருந்த நிலையில் விபத்து ஏற்படாமல் இருக்க லாரியை மாற்று திசையில் அவர் திருப்பி இயக்கியுள்ளார்.

லாரி ஓட்டுனரின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது லாரியில் உள்ள நெல் மூட்டைகளை வேறு வண்டியில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் மாற்றி வருகின்றனர் இதுகுறித்து திருவாரூர் நகர காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Link
சீர்காழி அருகே ஆற்றின் குறுக்கே சேதமடைந்த மூங்கில் பாலம்

சீர்காழி அருகே ஆற்றின் குறுக்கே சேதமடைந்த மூங்கில் பாலம்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இந்தியாவுக்கு வருகிறது Apple Pay

1
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved