news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பாடை கட்டி போராட்டம் நடத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
tv

Also Watch

tv

Read this

பாடை கட்டி போராட்டம் நடத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

கொடுங்கையூர், சென்னை

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

வடசென்னை கொடுங்கையூர் பகுதியில் 300 ஏக்கர் நிலப்பரப்பில் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக சென்னையில் இருக்கக்கூடிய குப்பை கழிவுகளை இங்கு கொட்டப்பட்டு மலைகள் போல் குப்பைகள் குவிந்திருக்கின்றன இதே போல் பெருங்குடி பகுதிகளும் குப்பை கிடங்குகள் இருந்தது அவற்றை மூடப்பட்ட நிலையில் கொடுங்கையூர் பகுதியில் அதிக அளவில் குப்பைகள் கொட்டப்பட்டு வந்தன.

இங்கு கொட்டப்பட்டு வரும் குப்பைகளால் ஆர் கே நகர் மற்றும் பெரம்பூர் தொகுதி மக்கள் மிகவும் பாதிப்பு ஏற்பட்டு அவதிப்பட்டு வருகின்றனர் ஆர் கே நகர் தொகுதி எழில் நகர் பகுதியில் அதேபோல் கொடுங்கையூர் பகுதியில் நிலத்தடி நீர் மாசு ஏற்பட்டுள்ளது அங்கு வசிக்கக் கூடிய மக்களுக்கு மூச்சுத் திணறல் கண் எரிச்சல் அதே போன்று நோய் தொற்று ஏற்படுவதாகவும் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்து அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

கடந்த இரண்டு ஆண்டுகளாக குப்பைக்கடங்கின் காம்பவுண்டு சுவர் அருகில் குப்பைகளை கொட்டுவதால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருவதாகவும் இது சம்பந்தமாக கடந்த ஆட்சியில் சட்டமன்ற உறுப்பினர்களிடம் புகார்
அளித்திருந்ததாகவும் அதே போல் தற்போது புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதல்வர் தொகுதியாக இருக்கக்கூடிய பெரம்பூர் மற்றும் நிதி அமைச்சர் தொகுதியாக இருக்கக்கூடிய ஆர் கே நகர் சட்டமன்ற உறுப்பினரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.

ஆனால் நாளுக்கு நாள் குப்பைகள் அதிகரித்து வருவதாகவும் இதனால் பெரும் பாதிப்பு ஏற்படுவதாகவும் மக்கள் நலனில் அக்கறை எடுத்துக்கொண்டு உடனடியாக இந்த குப்பை கிடங்குகளை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி எழில் நகர் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பாடை கட்டி ஊர்வலமாக சென்று கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பாடையை சாலையில் நடுவை வைத்து ஒப்பாரி வைத்து போராட்டக்காரர்கள் ஈடுபட்டதால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது உடனடியாக தமிழக அரசு கொடுங்கையூர் குப்பை கிடங்கை முழுவதுமாக அப்புறப்படுத்தி
பொதுமக்கள் நலனில் அக்கறை செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைத்துள்ளனர்.

Related Link
இந்து அறநிலையத்துறை அமைச்சருடன் 10 பேருக்கு அனுமதி

இந்து அறநிலையத்துறை அமைச்சருடன் 10 பேருக்கு அனுமதி

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு

5
19 mins agoshare
ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau